Home இந்தியா பயனற்ற அதிகாரியை துணைநிலை ஆளுநர் நியமித்ததால் தான் 44 பேர் பலியாகினர்முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்

பயனற்ற அதிகாரியை துணைநிலை ஆளுநர் நியமித்ததால் தான் 44 பேர் பலியாகினர்முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தகவல்

6
0
SHARE

புதுடெல்லி, ஜன. 10&

பயனற்ற அதிகாரியை துணைநிலை ஆளுனர் நியமித்ததால்தான் இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 நாள்களில் மட்டும்,  தில்லியில் உள்ள சாலையோரங்களில் தூங்கிய 44 பேர் குளிரால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விவரம் அனைத்தும் காவல்துறையின் ஆவணங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இப்பட்டியலில் 4 மற்றும் 2 வயதுடைய குழந்தைகளும் இடம் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக  ஊடகங்களில்  செய்தி வெளியாகியிருந்தது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளதாவது: குளிரால் 44 பேர் உயிரிழந்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து விளக்கம் அளிக்க டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாடு வாரியத் தலைமைச் செயல் அதிகாரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. பயனற்ற அதிகாரியை துணைநிலை ஆளுநர்  கடந்த ஆண்டு நியமித்தார். இதுபோன்ற அதிகாரிகளை நியமிப்பதற்கு முன் எங்களுடன் கலந்து ஆலோசிக்க துணைநிலை ஆளுநர் மறுக்கிறார். இதுபோன்ற சூழலில் எப்படி அரசாங்கத்தை நடத்த முடியும்? என கேள்வியெழுப்பியுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத் தலைமை செயல் அதிகாரி சுக்வீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் குளிரில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திக்கும் டெல்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் திறமைக்கும் தொடர்பு இல்லை. இறந்தவர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பான விவரங்களை எந்தவொரு அமைப்பிடமும் தெரிவிக்கவில்லை. டெல்லியில் குளிர் காலத்தில் சிலர் இறக்க நேரிடுகிறது.

ஆனால், அதற்காக இறந்தவர்கள் எல்லாம் இரவு நேர தங்கும் குடில் கிடைக்காமல் இறந்துவிட்டனர் எனக் கூற முடியாது. நிகழாண்டு செயல்படுத்தியுள்ள குளிர்கால செயலாக்க திட்டத்தின் படி மூன்று அடுக்கு கண்காணிப்பு முறை உள்ளது.  ஒவ்வொரு நாளும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டு, தலைநகரில் உள்ள இரவு நேரத் தங்கும் குடில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.நிகழாண்டு  அதிகபட்சமாக இரவு நேரத் தங்கும் குடில்களில் தங்கியோர் எண்ணிக்கை அதிகபட்சமாக  13,510  ஆக உள்ளது.

இது கடந்த ஆண்டை விட அதிகம். வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையும்,  மீட்பு அணியும் இயங்கி வருகின்றன. கடந்த மாதம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு இரவு நேரத் தங்கும் குடில்களில் தங்க வைப்பட்டனர் என்றார் சுக்வீர் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here