Home அரசியல் துரோக சிந்தனை இல்லாத மனிதரை முதல்வராக்குவோம் டி.டி.வி. தினகரன் பேட்டி

துரோக சிந்தனை இல்லாத மனிதரை முதல்வராக்குவோம் டி.டி.வி. தினகரன் பேட்டி

34
0
SHARE

சென்னை, ஆக. 31& துரோக சிந்தனை இல்லாத மனிதரை, முதல்வராக்குவது தான் எங்க்கள் எண்ணம் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள வீட்டில், .தி.மு.. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:சபாநாயகர் தனபால் அளித்த நோட்டீசுக்கு,  19 எம்.எல்..க்களும் பதில் கொடுப்பார்கள். முதல்வர், துணை முதல்வர் மற்றும்  அமைச்சர்கள் ஆகியோர் தவறான தகவல்களை,  மத்திய அரசாங்கத்திடம் கொடுத்து மோசடியாக  செயல்பட்டு வருகின்றனர்.

.தி.மு..  என்ற லட்டர்பேடை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுளது. ஆனாலும், அதையும் மீறி , அவர்கள் அதை பயன்படுத்தினார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் நியமனம் செல்லாது என்றெல்லாம் அவர்கள் போலியான தீர்மானத்தை போட்டு உள்ளனர்.

அதேபோல்,  அன்றைக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழகத்திலே கூடியிருந்தார்கள் என்றனர். அன்றைக்கு 21 பேர் புதுவையில் இருந்தார்கள். 22 பேர் செல்லவில்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் செல்லவில்லை. அப்படி இருக்கையில் 122 பேர் எப்படி அங்கே இருந்திருக்க முடியும் சட்டமன்ற உறுப்பினர்களை குறைத்து காண்பித்தால் ஆட்சி போய்விடும் என்பதற்காக அவர்கள் மோசடி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இங்கிருந்து மத்திய அரசிடம் சென்று , தவறான தகவல்களை சொல்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்திருப்பதாக சொல்கிறார்கள். அன்றைக்கு பன்னீர்செல்வம் தனக்கு ஆதரவாக 86 பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்.

அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். திறந்து விட்டால் வந்து விடுவார்கள் என்றார். ஆறேழு மாதங்கள் கழித்து கூட, அவரிடம் இருந்துதான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்தாரே தவிர இங்கிருந்து யாரும் செல்லவில்லை. புதுவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை. அவர்கள் அங்கு அமர்ந்திருந்தால் தான் தமிழகத்தில் தியாகத்துக்கு ஏற்பட்டிருக்கிற சோதனைக்கு விடிவு கிடைக்கும். இன்றைக்கு முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தான் அவர்கள் அங்கு இருக்கிறார்கள். துரோகம்செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் விட்டுவிட மாட்டோம். தனிப்பட்ட நலன் கருதியோ, பதவி ஆசையினாலோ நாங்கள் இதை செய்யவில்லை. துரோகம் வீழ்த்தப்பட வேண்டும்.

தமிழக மக்களை ஆள ஒரு நல்ல மனிதர், துரோக சிந்தனை இல்லாத மனிதரை நிச்சயம் தேர்ந்தெடுத்து முதல்வராக்க வேண்டும் என்பதுதான் எங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கோடான கோடி தொண்டர்களின் விருப்பமாகும் என்றார்.