Home சுடச்சுட 2013&ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஓரினச் சேர்க்கை குற்றமாகும் என்ற...

2013&ல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஓரினச் சேர்க்கை குற்றமாகும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்வோம்உச்சநீதிமன்றம் அறிவிப்பு

6
0
SHARE

புதுடில்லி, ஜன. 10&

ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கும் வகையில், 2013ல், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யப்போவதாக, உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த, 2013ல் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு, 377ன் படி, வயது, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் போன்றவை எப்படி இருந்தாலும், ஓரினச் சேர்க்கை என்பது, தண்டனைக்குரிய குற்றம் என தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பு 2009ல் டில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது.

அரசியலமைப்பு சட்டத்தில், பாகுபாடுகள் இருக்கக் கூடாது என்ற கருத்துக்கும், சமத்துவ கொள்கைக்கு முரணாகவும், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு, 377 உள்ளதாக குறிப்பிட்ட டில்லி உயர்நீதிமன்றம், ஓரினச் சேர்க்கை குற்றமாகாது என தீர்ப்பளித்திருந்தது.

கடந்த 2013ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, நாஸ் அறக்கட்டளை நிறுவனம் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும், அதன்பின் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில், மற்றொரு வழக்கை விசாரித்த, 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தனிநபர் சுதந்திரம் என்பது, ஒருவரின் அடிப்படை உரிமை. பாலின அடிப்படையில், பாகுபாடு பார்ப்பதை ஏற்க முடியாது.

உறவுகள், வாழ்வியல் முறை போன்றவை தனி நபரின் விருப்பத்துக்கு உரியவை, தன் வீட்டில் யார் நுழைய வேண்டும் என்பதை, சம்பந்தப்பட்ட நபரே முடிவு செய்ய வேண்டும். குடும்பம், திருமண உறவு, பாலின விருப்பம் போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

இந்நிலையில் நவ்தேஜ் சிங் ஜோஹர் என்பவர், இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு, 377ஐ அரசியல் சாசனத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்த் தாதர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை வழங்கும் ஷரத்து, அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

பரஸ்பர சம்மதத்துடன் உறவில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவது நியாயமற்றது என வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு, 377ன் கீழ் எழும் பிரச்சனைகள் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் அதிக நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது எனக் கூறினர்.

இதனால் இந்த வழக்கு, அதிக நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here