Home அரசியல் தி.மு.க. உறுப்பினருக்கு பேரவை தலைவர் எச்சரிக்கை

தி.மு.க. உறுப்பினருக்கு பேரவை தலைவர் எச்சரிக்கை

9
0
SHARE

சென்னை, ஜன. 10&

தி.மு.. உறுப்பினர் ஆஸ்டினுக்கு பேரவை தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பேசியதற்கு முதல்வர் விளக்கம் அளித்து பேசினார்.

அப்போது கன்னியகுமரி தி.மு.. சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேச முற்பட்டார். இதற்கு பேரவை தலைவர் தனபால் முதல்வர் பேசும்போது குறுக்கிடுவது மரபு கிடையாது அமைதியாக உட்காருங்கள் என்றார்.

இதனை தொடந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆஸ்டின் வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து குறுக்கிட்டு பேசுகிறார்.

நான் பேச எழுந்ததும் ஏதாவது ஒன்று எழுந்து பேசுகிறார் என்றார்.பேரவை தலைவர் தனபால் ஆஸ்டின் உங்களை எச்சரிக்கிறேன்.

நான் பேரவை தலைவராக பொறுப்பேற்றது முதல் இதுவரை தனி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுத்தது கிடையாது. உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கவேண்டாம்.

மீறினால் உங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here