Home அரசியல் துண்டுப் போட்டு வியாபாரம் செய்வது போல ஆளுநர் செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

துண்டுப் போட்டு வியாபாரம் செய்வது போல ஆளுநர் செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

13
0
SHARE

சென்னை, ஆக. 31& துண்டுப் போட்டு வியாபாரம் செய்வதுபோல ஆளுநர் செயல்படுகிறார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஆளுநர் உட்கட்சி விவகாரம் என்று இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்ஏற்கனவே ஓ.பி.எஸ். 10 எம்.எல்.ஏக்களை வைத்துக்கொண்டு சட்டமன்றத்தைக் கூட்ட சொன்னபோது, கூட்டிய ஆளுநருக்கு, அப்போது உட்கட்சி விவகாரம் என்பது தெரியவில்லையா? இதுதான் என்னுடைய கேள்வி.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மோடி தலைமையிலான பா... அரசு, மத்திய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறதுஅதன்படி இந்த ஆட்சி பணிந்து நடக்கிறது. எனவே, பிரிந்திருந்தவர்களை ஒன்றாக இணைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்து, கவர்னரைப் பயன் படுத்தி  கைகோர்த்து வைத்த காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆகவே, இதன் பின்னணியில் இருந்து பா... அரசியல் செய்வது தெளிவாக தெரிகின்றது.தி.மு.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளை ( இன்று) குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். அது பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் சந்திக்கிறோம். ஜனநாயகமுறையில் பணியாற்றுவது அவர்களுடைய கடமை.

அதை செய்யவில்லை என்றால், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழல் எங்களுக்கு ஏற்படும். .பி.எஸ்.  .பி.எஸ். ஆகிய இருவரின் கைகளையும் ஆளுநர் சேர்த்து வைத்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? கடலில் மீன் பிடித்துக் கொண்டு வந்து  கைகளை மறைத்தபடி ஒரு துண்டைப் போட்டு வியாபாரம் செய்வதைப் போல, ஒரு கவர்னர் செய்திருக்கிறார்இது கவர்னர் என்ற பொறுப்புக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் இழுக்கு.இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here