Home மற்றவை ஒகி புயலால் இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

ஒகி புயலால் இறந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

7
0
SHARE

சென்னை, ஜன. 10&

ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடந்து 2017ம் ஆண்டு ஒகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவை தலைவர் தனபால் கொண்டுவந்து பேசியதாவது:

29.11.2017 மற்றும் 30.11.2017 ஆகிய நாட்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழையுடன்ஒகிபுயல் கடும் சீற்றத்துடன் தாக்கியதில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது குறித்தும், குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.

பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் பணியினை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஐ..எஸ். அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர், உத்தரவிட்டார். மேலும் 12.12.2017 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர், உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம், ஊனமடைந்த மீனவர்களுக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.5 லட்சம் ரூபாய், பயிர் பாதிப்புக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பாரதப் பிரதமர்  19.12.2017 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதோடு, விவசாயிகள், பொது மக்கள் மற்றும் மீனவர் பிரதிநிதிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.133 கோடி முன்பணமாக மத்திய அரசு வழங்கியுள்ளதோடு மத்தியக் குழுவும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளது.

ஒகி புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாயும், கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 4,047 கோடி ரூபாயும் மத்திய அரசு தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டுமென்றும், பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால், இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒகி புயலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் இப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.” இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் மறைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும்  உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பேசினார்.இதனை தொடந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு மணி துளிகள் இரங்கல் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here