Home சுடச்சுட தொடர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்தொழிலாளர் நல ஆணையம்...

தொடர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் அவதி போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்தொழிலாளர் நல ஆணையம் இன்று முற்றுகை: சி.ஐ.டி.யு. அறிவிப்பு

7
0
SHARE

சென்னை, ஜன.10&

தொடர் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் நல ஆணையத்தை இன்று முற்றுகையிடப்போவதாக சி..டி.யு. அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4&ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். 6&வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் நடைபெற்றது.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதன் பேரில் நேற்று சென்னை பல்லவன் இல்லம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.

இது குறித்து சென்னை, பல்லவன் இல்லத்தில்  சி..டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது:

அமைச்சர் யாரோ எழுதிக்கொடுத்ததை படித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு மேல், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை பற்றி எதுவும் அவருக்கு தெரியாது என்பது தான் விளம்பரத்தின் அர்த்தம். 1.9.16ல் புது ஒப்பந்தம் வரவேண்டும். 31.8.16 சம்பளத்துடன் தான் கழித்துப்பார்த்து ஊதிய உயர்வைத்தர வேண்டும். ஆனால், இப்போது 1.9.18ல் என்ன சம்பளமோ அதைக்கணக்கிட்டு 31.8.16ல் வந்த சம்பளத்தையும் கணக்கிட்டுத்தான் அமைச்சர் தற்போது கணக்கைச்சொல்கிறார்.

16மாதங்களில் 3 சதவீத டி.என்.எஸ். அலவன்ஸ் பெற்றுள்ளோம். ஊதிய உயர்வும் தானாகவே வரும். அந்த தொகையையும் இவர் கொடுத்த உயர்வு போல் கணக்கு வைத்து ஒரு கணக்கை அவர் கூறுகிறார். கடுகு அளவு கூட வேலைநிறுத்தத்திலே எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. நம்முடைய தொழிலாளர்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை கொஞ்சம் கூடவில்லை அது அப்படியே இருக்கிறது. அதனால் தான், வெளியில் இருந்து ஆட்கள் எடுத்து எப்படியாவது வண்டியை ஓட்டுவேன் என்கிறார். தற்காலிக ஓட்டுனர்களால் பல்வேறு விபத்துக்கள் நேரிடுகிறது.

போக்குவரத்து துறை அமைச்சர் ஊதியக்கோரிக்கையை மறுப்பதற்கு எந்த வித காரணமும் இல்லாததால் நாங்கள் பொய்சொல்கிறோம் என்று கூறுகிறார். நாங்கள் தொழிலாளர்களை திசை திருப்புகிறோம் என்று பேசுகிறார். ரூ.7ஆயிரம் கோடி நிலுவை உள்ளது என சவுந்தரராஜன் சொல்வது பொய். ஒரு மூத்த தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ இவ்வாறு எல்லாம் பேசலாமா என்று என்னைபார்த்து கேட்கிறார். உண்மை

என்ன உயர்நீதிமன்றத்தில் இவர்கள் ஒரு மனுவைப்போட்டார்கள்.  அந்த மனுவிலே எவ்வளவு பாக்கியுள்ளது. என்று இவர்கள் கணக்கு கொடுத்துள்ளார்கள்.

அந்த கணக்கை அப்படியே திருப்பிபோட்டு உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளார். அந்த தீர்ப்பில் இருக்கிற விஷயங்கள் தான் தொழிற்சங்கங்கள் வெளியே சொல்லிக்கொண்டிருக்கும் விஷயங்கள். அதை யாரும் திருத்தமுடியாது, அழிக்கமுடியாது. இந்த தீர்ப்பின் படி அரசு ஒப்புக்கொண்டுள்ள தொகை ரூ. 6,487கோடி நாங்கள் தொழிலாளர்களுக்கு பாங்கி வைத்துள்ளோம் என்று அன்றைக்கு ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு இன்று 6 மாதம் ஆகியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் நம்மிடம் பிடித்தம் செய்யும் பணம் ரூ.150கோடி. எனவே, ரூ.950கோடி இந்த 6மாதத்தில் அவர்கள் கட்டவேண்டியுள்ளது. இந்த 6 மாதத்தில் 3000 தொழிலாளிகள் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு தரவேண்டிய கிட்டத்தட்ட ரூ.300 கோடியில் ஒரு ரூபாய் கூட அவர்கள் தரவில்லை. இவையனைத்தையும் சேர்த்தால் ரூ.7717கோடி பாக்கிவைத்துள்ளார்கள்.

எங்களுக்கு கணக்கு தெரியாது என்று கணிதமேதை விஜயபாஸ்கர் சொல்கிறார். ஒரு தொகையை 2.44ஆல் பெருக்கினால் பெரியதா அல்லது 2.57ஆல் பெருக்கினால் பெரியதா இதை 1ம் வகுப்பு குழந்தையிடம் கேட்கவேண்டிய கேள்வி அதுவும் சரியாக 2.57 என பதில் சொல்லும். ஆனால் விஜயபாஸ்கர் என்ன சொக்கிறார் என்றால் 2.44ஆல் பெருக்கினால் தான் அதிகம் வரும் என்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சி..டி.யூ. மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தெரிவிக்கையில், நாளை(இன்று) தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் துறை அலுவலகங்களுக்கு  முன்னாள், போக்குவரத்து துறையின் 22 சங் கதொழிலாளர்களுடைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். சட்டவிரோ ஒப்பந்தத்தை தொழிலாளர் ஆணையர், செயலாளர் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறாக அந்த கூட்டத்திலே முழக்கம் இடப்படும். அதுவரை போராட்டமும் தொடரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here