Home சம்பவம் மேற்கு மாம்பலத்தில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலைகாப்பாற்ற சென்ற மகளுக்கும் அரிவாள் வெட்டு

மேற்கு மாம்பலத்தில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலைகாப்பாற்ற சென்ற மகளுக்கும் அரிவாள் வெட்டு

8
0
SHARE

சென்னை, ஜன. 10&

சென்னை மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொல்லப்பட்டார். காப்பாற்ற சென்ற  மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மேற்கு மாம்பலம் நாயக்கன்மார் தெருவைச் சேர்ந்தவர் கந்தன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து  வந்தார். மேலும் அந்தப் பகுதியில், கந்தன் கேபிள் டி.வி. நிறுவனமும் நடத்தி வந்தார். கந்தன் மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு,  ரமேஷ் (21) என்ற மகனும், கீர்த்தனா (18) என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனா அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில்  நேற்று  காலை தனது மொபெட்டில் கீர்த்தனாவை ஏற்றிக் கொண்டு, கந்தன், அவரை கல்லூரியில் விடுவதற்காக புறப்பட்டுச் சென்றார். வீட்டின் அருகே முத்தாலம்மன் கோயில் தெருவில் வழியாக அவர் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் ஒன்று, அவர் மொபெட்டின் மீது மோதியது. இதில் மொபெட்டில் இருந்து கந்தனும், கீர்த்தனாவும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த பைக்கில் இருந்து வேகமாக இறங்கி வந்த, இரு நபர்கள், திடீரென கந்தனை அரிவாளால் வெட்டினர். இதை பார்த்த கீர்த்தனா அலறினார். மேலும், கந்தன் தப்பியோடாமல் இருக்க, ஆட்டோவில் வந்த சிலர் நபர்களை  பார்த்துக் கொண்டனராம். அதேநேரத்தில் தந்தையை அரிவாளால் வெட்டும் நபர்களை, கீர்த்தனா தடுத்தார். இதைப் பார்த்த அந்த நபர்கள், கீர்த்தனாவின் வலது கையை வெட்டி அவரை கீழே தள்ளினர். இதைப் பார்த்த பொதுமக்கள், அலறியடித்து ஓடினர்.

இதற்கிடையே பலத்த காயமடைந்த கந்தன் மயங்கி கீழே விழுந்தார். உடனே அந்தக் கும்பல் அங்கிருந்து ஆட்டோவிலும், பைக்கிலும் தப்பிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு குமரன்நகர் போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தி, கந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்தனா, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். இந்த  சம்பவம் தொடர்பாக குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீசார் நடத்திய விசாரணையில், கந்தனுக்கும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருரவுடிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. கந்தன் அந்த ரவுடிக்கு எதிராக காவல்துறைக்கு சில தவகல்களை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கந்தன் மீது, அந்த ரவுடி கடுமையான கோபத்தில் இருந்து வந்ததும், அதன் காரணமாக, கந்தன் கொல்லப்பட்டாரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here