Home மற்றவை பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்பேரவையில் முதல்வர்...

பொதுமக்களின் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்பேரவையில் முதல்வர் வேண்டுகோள்

9
0
SHARE

சென்னை, ஜன. 10&

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் 4.1.2018ல் இருந்து தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். தொழிலாளர்கள் தாங்கள் முன்வைத்த 3 சதவீத ஊதிய உயர்வில் இருந்து 2.87 சதவீதத்திற்கும் பிறகு 2.57 சதவீதத்திற்கும் குறைந்து வந்திருக்கிறார்கள்.  கோரிக்கைக்கு நீங்கள் தயவுசெய்து விட்டுக்கொடுத்து, அரசுடன் சுமூகமான தீர்வு காண வேண்டுமென தொழிலாளர்கள் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். முதலமைச்சரே நேரடியாக இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நிலையை ஏற்படுத்தி தர வேண்டுமென நான் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

தொடந்து காங்கிரஸ் சட்டமன்ற குழுதலைவர் கரி.ராமசாமி பேசினார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது தொழிற்சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அவை நிறைவேற்றி தரப்பட்டது. பல கட்டங்களாக அவர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது  ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தையின் போது 2.44 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம். ஆனால்  திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தற்காலிக ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடந்து பேசிய ஸ்டாலின், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாத நிலையில் முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண்பேன் என உறுதியளித்தால் தங்களுடன் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு முறையும்  போக்குவரத்துத்துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசிய போது, என்னுடன் பேசிவிட்டு சென்று தான் எங்களுடைய கருத்தின் அடிப்படையிலே தான் அங்கே பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலமைச்சர் சொல்லித்தான் அவர் அந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தந்தார். ஆகவே முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வது தவறானது. ஆகவே, எதிர்க்கட்சி தலைவர் துணைத் தலைவர் ஆகியோர் இதை நன்கு ஆலோசனை செய்து, இருக்கின்ற நிதிநிலைமை, போக்குவரத்து கழகத்தின் நிதிநிலைமை நன்றாக உங்களுக்கு தெரியும். ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது நியாயமல்ல.

ஏனென்றால், தற்போது இருக்கின்ற நிலைமை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். உங்களுடைய ஆட்சியிலேயே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 922 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அதனுடைய நிதிநிலைமை உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே, இதையெல்லாம் உணர்ந்து தான் தற்போது இருக்கினற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நான் தற்போது 2.44 மடங்கு ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்து அது அறிவிக்கப்பட்டு, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் என்னுடைய நிலைப்பாடு.

ஆகவே  எதிர்க்கட்சித் தலைவர்  குறிப்பிட்டதைப்போல மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்லி, பிரதிநிதிகளும், அதோடு போக்குவரத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here