Home தமிழகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வருக்கு அமோக வரவேற்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வருக்கு அமோக வரவேற்பு

31
0
SHARE

ஸ்ரீபெரும்புதூர்.ஆக31 காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆரின்  நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி  படப்பை,ஒரகடம் வழியாக காஞ்சிபுரம்சென்றார் வழி நெடுகிலும்  .தி.மு.காவை  சேர்ந்த கட்சித் தொண்டர்கள் வரவேற்கும் விதத்தில்  சால்வை அணிவித்தும் மலர்கொத்து கொடுத்தும் வரவேற்றார்கள்ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு வங்கப்பட்டது.  பாண்டியன்  முதல்வருக்கு சால்வை அணிவித்தும். மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றார்கள். படப்பை இதே போல காஞ்சீபுரத்தில் அரசு கட்டிட திறப்பு விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் காஞ்சீபுரம் செல்லும் வழியில் படப்பையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாணவேடிக்கைவுடன், மேளதாள முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் பெஞ்சமின், பழனி எம்.எல்., காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஒன்றிய செயலாளர் எழிச்சூர் இராமச்சந்திரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஒரத்தூர் என்.டி.சுந்தர், மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ், காவனூர் கிளை செயலாளர் லயன் கே.எல்.வெங்கடேசன்,  முன்னாள் ஒரத்தூர் ஊராட்சி மன்ற தவைலர் கற்பகம் என்.டி.சுந்தர், உள்பட பலர் கலந்துக்கொண்டனர். காரில் இருந்து இறங்கிய முதல்வர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.