Home இந்தியா அரசியல்வாதிகளை விட அதிக ஆதரவு: ஒரே வாரத்தில் ரஜினிமன்றம் ‘ஆப்’ புதிய சாதனை

அரசியல்வாதிகளை விட அதிக ஆதரவு: ஒரே வாரத்தில் ரஜினிமன்றம் ‘ஆப்’ புதிய சாதனை

10
0
SHARE

சென்னை, ஜன. 9&

ஒரேவாரத்தில் அரசியல் வாதிகளை விட அதிக ஆதரவு பெற்று ரஜினிமன்றம்ஆப்புதிய சாதனை படைத்தது.

வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக இணையதளஆப்களை வெளியிடுகின்றன.

தற்போது அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களும் இது போன்றஆப்களை வெளியிட்டு நேரடி தொடர்புகளை ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்தும் ரசிகர்கள், தொண்டர்கள், பொது மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள கடந்த வாரம்ஆப்ஒன்றை வெளியிட்டார். ரஜினி மன்றம் என்ற பெயரில் இந்த ஆப் வெளியிடப்பட்டது.

இது வெளிவந்து ஒருவாரத்திலேயே 1 லட்சம் பேர் பதிவிறக்கம் (டவுண்லோடு) செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் இது போல ஆப்களை வெளியிட்டுள்ளனர். ஆனாலும் அதை மிஞ்சும் வகையில் தொடங்கிய ஒரு வாரத்திற்குள் பதிவிறக்கத்தின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

தி.மு.. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், பா... இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ், தே.மு.தி.. தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் ஆப்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

2016&ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பா... அன்புமணிராமதாசை முதல்&அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது. அப்போது கட்சி தொண்டர்கள், பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு ஆதரவை பெறும் வகையில் அன்புமணி ஆப் ஒன்றை தொடங்கினார். அதை 50 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்திருந்தனர். மற்ற தலைவர்களின் ஆப்கள் பதிவிறக்கம் குறைவாக இருக்கிறது.

ரஜினிகாந்த் ஆப் பதிவிறக்கம் தொடர்பு கொண்டிருப்பதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வாதிகள் தொடங்கும் ஆப்கள் தொடர்பாக கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிபுணரும், தி.மு.. எம்.எல்..வுமான பழனிவேல் தியாகராஜனை கேட்டபோது அவர் கூறியதாவது:&

ஆப் தொடங்குவது அரசியல்வாதிகளுக்கு மிக உதவியாக இருக்கும். அது இருபக்க தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் அமையும். நம்மை பற்றி மக்களிடம் என்ன அபிப்பிராயம் இருக்கிறது என்பதை கண்காணித்திக் கொள்ளலாம்.

தீவிர ஆதரவாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம். வெளியில் உள்ள சூழ்நிலைகளையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நம்மை பற்றிய கருத்துக்கள் அதில் இடம்பெறும். அது நமக்கு மிக உதவியாக இருக்கும். அதே நேரத்தில் ஆப் மட்டுமே அரசியல் செய்வதற்கு போதுமானதாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அன்புமணி ராமதாஸ் இது பற்றி கூறும்போது, தமிழ்நாட்டில் 2 கோடி வீடுகளில் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அரசியல்வாதிகள் தொடங்கும் ஆப் மூலம் பொதுமக்களை நேரடியாக எளிதாக சென்றடைய முடியும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here