Home இந்தியா ரூ.100 கோடிக்கும் மேல் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கணக்குகள் வெளியீடு

ரூ.100 கோடிக்கும் மேல் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கணக்குகள் வெளியீடு

5
0
SHARE

புதுடெல்லி, ஜன.9&

பொதுத்துறை வங்கிகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேல் செலுத்த வேண்டி உள்ள வாராக்கடன் கணக்குகளின் எண்ணிக்கை 1,463 உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகபட்சமாக 265 கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகள் மூலம் ரூ.77,538 கோடி வாராக்கடன் உள்ளது. செப்டம்பர் காலாண்டு வரையிலான தகவல்கள் இவை என நிதி அமைச்சகம் தெரிவித்திருக் கிறது.

எஸ்.பி.. வங்கிக்கு அடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த வேண்டிய வாராக்கடன் கணக்கு கள் 143 ஆக உள்ளன.

இந்த வாராக்கடன் கணக்குகள் மூலம் வங்கிக்கு ரூ.45,973 கோடி வர வேண்டி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கனரா வங்கியில் அதிக வாராக்கடன் கணக்குகள் உள்ளன. சிறிய பொதுத்துறை வங்கிகளில் அதிக வாராக்கடன் கணக்குகள் யூனியன் வங்கியில் இருக்கின்றன.

இந்த வங்கியில் ரூ.100 கோடிக்கு மேல் வர வேண்டிய கணக்குகள் 79ஆக இருக்கின்றன. இதேபோல ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸில் 68 கணக்குகளும், யூகோ வங்கி யில் 62 கணக்குகளும் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

செப்டம்பர் காலாண்டு முடிவில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.7.34 லட்சம் கோடியாக உள்ளது.

வங்கிகளில் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அதிக தொகையை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்த வங்கிகளின் நிலைமையை மேம்படுத்த ரூ.2.12 லட்சம் கோடியை முதலீடு செய்ய இருப்பதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக ரூ.80 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு நாடாளுமன்ற அனுமதிக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here