Home இந்தியா நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம்அக்ஷய் குமாரின்...

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம்அக்ஷய் குமாரின் ‘பேடு மேன்’ படத்துடன் மோதுகிறது

8
0
SHARE

புதுடெல்லி, ஜன.9&

நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவதி திரைபடம் பத்மாவத் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இந்த படம் அக்ஷய் குமாரின்பேடு மேன்திரைப்படத்துடன் மோதுகிறது.

ராஜஸ்தானின்சித்தூர்ராணிபத்மினியின்கதையைமையமாகவைத்துபத்மாவதிஎன்றபெயரில்சினிமாபடம்தயாரிக்கப்பட்டுஉள்ளது. இதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதால் படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ரூ.130 கோடி செலவில் தயாரான படம் முடங்கியது.  இந்த நிலையில் ஆட்சே பகரமான காட்சிகளை நீக்கிய பின்பு மீண்டும் டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசு செய்தனர்.

இதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயர்பத்மாவத்எனவும் மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்துபத்மாவத்படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு.. சான்றிதழ் வழங்கி திரையிட அனுமதி அளித்துள்ளது. இந்த படம் ஜனவரி 25 ந்தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காட்சிகளால் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால்முன்புதிட்டமிடப்பட்டதைவிடகூடுதலாக 60 நாடுகளில் படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவிலும் கூடுதல் நகரங்களில் ரிலீசாகிறது. இதற்கான பணிகள் நடை பெறுகிறது. இந்தப்பணி முடிந்ததும் உலகம் முழுவதும் ஒரே நாளில் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

அன்றை தினம் உலகம் எங்கும் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேடு மேன் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேடு மேன் என்ற திரைப்படம் தமிழர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு ஆகும். இந்த படத்தின் இயக்குனர் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்ட பால்கி என்ற பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here