Home சம்பவம் கொருக்குப்பேட்டை ரவுடி கொலையில் 4 பேர் கைது

கொருக்குப்பேட்டை ரவுடி கொலையில் 4 பேர் கைது

10
0
SHARE

சென்னை, ஜன. 9&

சென்னை கொருக்குப்பேட்டையில் பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்ததை தட்டிக்கேட்ட  ரவுடியை கொன்ற வழக்கில் 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் () வெள்ளை சரவணன் (34). இவர் மீது அடிதடி வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரவணனின் மனைவி கஜலட்சுமி (28) இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கஜலட்சுமி கணவன் சரவணனை விட்டு பிரிந்தார். இதன் பிறகு அதே பகுதியை சேர்ந்த ஜீனத் (35) என்பவருடன் சரவணன் குடும்பம் நடத்தி வந்தார்.  வழக்கு ஒன்றில் கைதாகி சரவணன் சிறையில் அடைக்கப்பட்டார்.  கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஜாமீனில் சரவணன் வெளியே வந்தார்.

சரவணன் சிறையில் இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த தென்னரசு (24) என்பவர், ஜீனத்தை உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜாமீனில் வெளியே வந்த சரவணனிடம், ஜீனத் தெரிவித்துள்ளார்.

இதனால் சரவணன் கடும் ஆத்திரம் அடைந்தார். தென்னரசை சந்தித்து, இன்னொருமுறை இது போன்று நடந்துக்கொண்டால் தீர்த்துகட்டிவிடுவேன் என  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த 6ம் தேதி இரவு நண்பரை பார்க்க கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகருக்கு சரவணன் சென்று விட்டு, மீனம்பாள் நகர் பகுதியில் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு, பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த தென்னரசு(24) அவரது அண்ணன் இளையரசு (22) மற்றும் நண்பர்கள் டேனியல் பிரபா (25), சிறுவர் ஒருவர் உட்பட ஆகியோர் ஒன்று சேர்ந்து,  சரவணனை வெட்டிக்கொன்றனர் என்பது தெரியவந்தது.இதையடுத்து  ரவுடி சரவணனை கொலை செய்த 4 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார்  வலை வீசிஅவர்களை தேடி வந்தனர்.

இதை தொடர்ந்து,  தென்னரசு, இளையரசு, டேனியல் பிரபா மற்றும் சிறுவர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here