Home அரசியல் ‘கட்சியின்பெயரை இப்போது அறிவிக்க மாட்டேன்’நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

‘கட்சியின்பெயரை இப்போது அறிவிக்க மாட்டேன்’நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

10
0
SHARE

சென்னை, ஜன. 9&

நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்துள்ளார்.

இதற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நடந்த நட்சத்திரகலை விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். அவருடன் நடிகர் சூர்யாவும் வந்தார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரஜினிகாந்தை நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அரசியல் பற்றிய சரமாரியான எந்த கேள் விக்கும் பதில் அளிக்காமல் சென்றார். கடைசியாக கட்சிப் பெயர் எப்போது அறிவிப்பீர்கள் என்று கேட்டதற்குஇப்போதைக்கு இல்லைஎன்று கூறிவிட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here