Home மற்றவை 12&ம்தேதிவரை பேரவை கூட்டத்தொடர்பேரவை தலைவர் தகவல்

12&ம்தேதிவரை பேரவை கூட்டத்தொடர்பேரவை தலைவர் தகவல்

13
0
SHARE

சென்னை, ஜன. 9&

12&ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று பேரவை தலைவர் தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் உரை முடிந்ததும் பேரவையில் அலுவல் முடிவு பெற்றது. இதை தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்குழுவில் மொத்தம் 17 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் சில அலுவல் காரணமாக கலந்துகொள்ளவில்லை. மீதி 16 பேர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேரவை தலை வர் தனபால் தெரிவிக்கையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. 9ம் தேதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மேலும் 2017 ஆண்டு ஒகி புயலில் மறைந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

அன்றேஆளுநர்உரைக்குநன்றி

தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கும். 10ம் தேதி புதன் கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடரும். இந்த விவாதம் 11ம் தேதி வரை நடைபெற்று அன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி உட்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் பேசுவார்கள்.

12ம் தேதி காலை 2017&18ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படுகிறது. அன்றே, ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலளிப்பார். 2017ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதி நிலை அறிக்கை குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைக்கான அறிக்கை அதன் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு, மானிய கோரிக்கைகள் சட்டமுன் வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் விவாதமின்றி நிறைவேற்றுகிறது.

பின்னர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், வேறு அலுவல்கள் இருந்தால் அதுவும் 12ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும். கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கூடும். ஒவ்வொரு நாளும் ஆரம்பித்தவுடன் கேள்வி பதில் வினாக்கள் விடைகள் இருக்கும். கூடுதலாக எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்று 12ம் தேதிக்கும் சபை நடவடிக்கை நீட்டிக்கப்பட்டது என்றார்.

இதனை தொடந்து செய்தியாளர்கள் தி.மு.. வெளிநடப்பு என்று செய்தி வருகிறதே என்றனர். இதற்கு பேரவை தலைவர், ஒருநாள் கூடுதலாக கேட்டார்கள். மூன்று நாட்களில் முடிக்க வேண்டியதை அவர்கள் (தி.மு..வினர்) கேட்டதால் வெள்ளிகிழமை வரை கூட்டம் நடக்கிறது. சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நானும் அவர்களிடம் வேண்டுகோளை வைத்துள்ளேன். இது குறித்து எதிர்கட்சி தலைவரிடம் பேசி சுமூகமாக முடிக்கப்படும்.

குழுக்கள் முறையாக செயல்பட்டு வருகிறது. எப்போது மாற்றவேண்டுமோ அப்போது குழுக்கள் மாற்றப்படும். இவை அனைத்தும் என்னுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றார்.

டி.டி.வி. தினகரன் பேச வாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேட்டபோது உறுப்பினர்கள் தாங்கள் பேசுவதற்கு அனுமதி கேட்பார்கள். அவை சூழ்நிலைகேற்ப முடிவு செய்யப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here