Home Uncategorized எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் ஆளுநரிடம் தி.மு.க. கூட்டணியினர் மனு

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் ஆளுநரிடம் தி.மு.க. கூட்டணியினர் மனு

33
0
SHARE

சென்னை, ஆக. 28& எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடவேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆளுனரிடம் மனு அளித்தது.

தமிழக எதிர்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், எம்பி கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி. எம்.ஏல்.ஏ. அன்பழகன், காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர் அபுபக்கர் ஆகியோர் நேற்று காலை தமிழக பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடவேண்டும் என்று மனு அளித்தனர்.இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எடப்பாடி கே. பழனிசாமி கடந்த பிப்ரவரி 16ம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற தினமே தாங்கள் 15 நாட்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூப்பிக்கச் சொன்னீர்கள். பிப்ரவரி 18ம் தேதி ஜனநாயகத்திற்கு விரோதமாக நடந்த அந்த நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அ.தி.மு.கவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் உங்களை நேரில் சந்தித்து முதல்வருக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றதான் மூலம் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி எழுந்திருப்பதை தங்களுக்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன். பெருமபான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறாத முதலமைச்சர் தலைமையிலான எந்தவொரு அமைச்சரவையும் மாநிலத்தை ஆள அனுமதிக்கக் கூடாது. அப்படி நீடித்தால் அது சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானதாகும்.234 சட்டமன்ற உறுப்பினர்களில், சட்டப்பேரவைத் தலைவர் உட்பட மொத்தம் 113 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே ஆளும் அரசு பெற்றுள்ளது. தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையறிந்தும் நீங்கள் துணைமுதல்வர் மற்றும் அமைச்சருக்கு பதவி பிரம்மாணம் செய்து வைத்துள்ளீர்கள். அப்பொழுது அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என நீங்கள் அறிவதற்கு தவறிவிட்டதாக கருதுகிறேன். 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை திரும்பப்பெற்ற அன்றே நான் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இவர்களை நிருப்பிக்க உத்தரவிடவேண்டுமென கோரிக்கை கடிதம் அளித்துள்ளேன்.தி.மு.க மட்டுமின்றி காங்கிரஸ் இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்பட்ட கட்சிகளும் வலியுத்தியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடாதிருப்பது நாடாளுமன்ற மரபுகள், உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் இதுவரை அளித்துள்ள தீர்ப்புகள் முழுமையாக மீறப்பட்டுள்ளது. எனவே ஆளும் அரசு நம்பிக்கை வக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்தவேண்டுமென ஆளுநர் உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, முதல்வராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்த ஒரு மைனாரிட்டி அரசாக உள்ளார்.¢ அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதியின்படி மைனாரிட்டி அரசு ஆட்சி செய்ய முடியாது. எனவே இதை ஒரு விளக்கமான கடிதத்தின் மூலம் ஆளுநரிடம் தெரிவிக்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன் பெயரில் கடிதத்தின் மூலம் நாங்கள் இதை ஆளுனரிடம் தெரிவித்துள்ளோம்.

தமிழகத்தில் உள்ள 233 எம்.எல்.ஏக்களில் தி.மு.க 89, காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1, தினகரனிடம் 22 என மொத்தம் 120 எம்.எல்.ஏக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக உள்ளனர். இதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டி, சட்டமன்றத்தில் எடப்பாடி அரசிடம் மெஜாரிட்டியை நிருபித்து காட்ட சொல்லவேண்டும். இதே போல் கடந்த பிப்ரவரி மாதத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியினை நிருபிக்க சொன்னிர்கள் அதே போல் இப்பொழுதும் நிருபித்து காட்டசொல்லவேண்டும் என்றோம்.

அதற்கு ஆளுநர் எனக்கும் செய்திகள் வந்திருக்கிறது இது குறித்து சட்டப்படி நடவடிக்கையை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார். ஆளுநர் நடவடிக்கைக்கு பின்னரே தி.மு.கவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுப்பதா வேண்டாமா என்பது தெரியும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்தது ஜானதிபதியிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.