Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

13
0
SHARE

* அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக சவுதியில் 11 இளவரசர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

* ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தயாரித்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் வெடிகுண்டு வெடித்து தலிபான் தளபதி உள்பட 4 பேர் உயிர் இழந்தனர்.

* எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டின் சிறையில் வாடிய இந்திய மீனவர்கள் 147 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

* தனது மனநிலை குறித்து விமர்சித்து எழுதப்பட்டுள்ள புத்தகம் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடி உள்ளார். இது ஒரு மோசடி என்று விமர்சித்துள்ள டிரம்ப், புத்தகத்தின் ஆசிரியரை பொய்யர் என்றும் கூறி உள்ளார்.

* அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள குளிர் காலநிலை காரணமாக, அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பனிக்கட்டியாக உறைந்து போய் விட்டதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here