Home உலகம் ஆன்மிக குருவை ரகசியமாக மணந்தேனா?இம்ரான் கான் மறுப்பு

ஆன்மிக குருவை ரகசியமாக மணந்தேனா?இம்ரான் கான் மறுப்பு

13
0
SHARE

இஸ்லாமாபாத், ஜன. 8&

ஆன்மிக பெண் குருவை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக பரவிய செய்திகளை இம்ரான்கான் மறுத்து உள்ளார். தனிநபர் சுதந்திரத்தை ஊடகங்கள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்(64). இவர் பாகிஸ்தான் தெஹ்ரிக்&&இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.

1995ம் ஆண்டு மே மாதம் 16&ந் தேதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் திருமணமான 9 ஆண்டுகளில் 2004ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் 2015&ம் ஆண்டில் ஜனவரி மாதம் 8&ந் தேதி தொலைக்காட்சி தொகுப்பாளர் ரீசும் கான் என்பவரை 2வது திருமணம் செய்தார்.

இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார். அதை தொடர்ந்து தனிமையில் இருந்த இம்ரான்கான் 3&வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

அதில் சென்ற ஒன்றாம் தேதி, இம்ரான்கான் புஷ்ரா மனேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த திருமணத்தை இம்ரான்கான் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான முப்தி சயீத் என்பவர் நடத்தி வைத்ததாக கூறப்பட்டது. புஷ்ரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் ஆவார்.

இந்த நிலையில் மூன்றாவது திருமணம் குறித்த செய்திகளை இம்ரான் மறுத்து உள்ளார். இதுகுறித்து இம்ரான்கான் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:&

பொதுவாழ்க்கையில் இல்லாத ஒரு பெண்ணை இம்ரான் கானுடன் தொடர்புப்படுத்தி அவருடைய தனிப்பட்ட வாழ்வு என்னும் உணர்வுப்பூர்வமான பிரச்சினையை கற்பனை கலந்த கதைகளாக ஊடகங்கள் பொது அரங்கில் வெளிப்படுத்து கவலைக்குரியது.

ஊடகங்களின் இத்தகையை செயல்கள் அந்த பெண்ணின் மீதும் அவரது குழந்தைகள் மீதும் பெரிய அழுத்தத்தை உருவாக்கி விடும். இம்ரான் கானின் விருப்பத்துக்கு அந்த பெண் சம்மதம் தெரிவித்தால் இதுதொடர்பான அறிவிப்பை இம்ரான் கான் உரிய முறையில் வெளியிடுவார்.

அதுவரையில், அவர்கள் இருவரின் தனிநபர் வாழக்கைக்கான சுதந்திரத்தை ஊடகங்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here