Home உலகம் வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உடன் பேசுவேன்’அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உடன் பேசுவேன்’அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

14
0
SHARE

வாஷிங்டன், ஜன.8&

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் டெலிபோனில் பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

அணு ஆயுத சோதனை, அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை என வடகொரியா மிரட்டி வருகிறது. வடகொரியாவின் இச்செயலுக்கு அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச்செல்லக்கூடிய ஏவுகணைகளும் தங்களிடம் இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கான பொத்தான் (சுவிட்ச்) தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த அதிபர் டிரம்ப், கிம் குறிப்பிடும் ஆயுதங்களை விட மிகப்பெரிய ஆயுதங்கள் எங்களிடம் (அமெரிக்கா) இருக்கிறது. இதனை, மக்களை பட்டினியால் தவிக்க விட்டு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் வடகொரிய அதிபரிடம் சொல்லுங்கள் என தெரிவித்து இருந்தார்.

இரு நாட்டு தலைவர்களிடத்தில் ஏற்பட்ட இந்த வார்த்தை போர் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் வடகொரிய அதிபருடன் டெலிபோனில் பேசுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, ”வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு முற்றிலும் தயாராக உள்ளேன். வடகொரியா மற்றும் தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது முன்நிபந்தனைகள் இருக்கும் எனவும் கூறி உள்ளார். பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளது, கொரிய தீபகற்ப பகுதிகளில் போர் பதற்றத்தை தணிக்கும் என்றே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here