Home உலகம் நிலவில் காலடி வைத்த விண்வெளி வீரர் ஜான் காலமானார் நாசா ஆழ்ந்த இரங்கல்

நிலவில் காலடி வைத்த விண்வெளி வீரர் ஜான் காலமானார் நாசா ஆழ்ந்த இரங்கல்

13
0
SHARE

நியுயார்க், ஜன.8&

அமெரிக்காவின்நாசாமையத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஜான் யங். இவர் தனது 87வது வயதில் முதுமை காரணமாக மரணம் அடைந்தார். இவர் 2 தடவை சந்திரனுக்கு சென்று திரும்பியுள்ளார்.

1969ம் ஆண்டு அப்பல்லோ 10 விண்கலம் மூலம் சந்திரனுக்கு பரிசோதனை அடிப்படையில் சென்றார். அப்போது இவர்களது விண்கலம் சந்திரனில் தரை இறங்கவில்லை. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியது. இவர் ஜெமினி, அப்பல்லோ மற்றும் ஸ்பேஸ் ஷட்டில் விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இவரது மறைவுக்குநாசாமையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here