Home விளையாட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 350 ரன் இலக்கு என்றாலும் இந்தியா வெற்றி...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 350 ரன் இலக்கு என்றாலும் இந்தியா வெற்றி பெறும்புஜாரா நம்பிக்கை

20
0
SHARE

கேப்டவுன், ஜன.8&

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 350 ரன் இலக்கு என்றாலும், இந்தியா வெற்றி பெறும் என்று புஜாரா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்னில்ஆல்அவுட்ஆனது. இந்தியா முதல் இன்னிங்சில் 209 ரன்னில் சுருண்டது.

ஹர்த்திக் பாண்டியா ஒருவர் மட்டுமே தாக்கு பிடித்து ஆடினார். அவர் 95 பந்தில் 93 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும். அவரும் புவனேஸ்வர்குமாரும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 99 ரன் எடுத்து சாதனை படைத்தனர். பிலாண்டர், ரபாடா தலா 3 விக்கெட்டும், மோர்னே மோர்கல், ஸ்டெயின் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

77 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர்கள் எல்கர், மார்கிராம் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.

இந்த இருவரையும் பாண்டியா அவுட் செய்தார். தென்ஆப்பிரிக்கா ஒட்டு மொத்தமாக 142 ரன்கள் முன்னிலை, கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் கேப் டவுன் டெஸ்ட் குறித்து இந்திய பேட்ஸ்மேன் புஜாரா கூறுகையில் ‘‘நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அதிகமான ரன் இலக்கு நிர்ணயிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஆனால் அதே நேரத்தில் ஆடுகளத்தின் தன்மையை வைத்து பார்க்கும்போது 350 ரன் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் எங்களால் அந்த ரன்னை எடுத்து வெற்றி பெற இயலும். ஹர்த்திக் பாண்டியாவின் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது’’ என்றார்.