Home இந்தியா ஆதார் பாதுகாப்பற்றது என அம்பலப்படுத்திய பத்திரிகை மீது வழக்கு

ஆதார் பாதுகாப்பற்றது என அம்பலப்படுத்திய பத்திரிகை மீது வழக்கு

11
0
SHARE

புது டெல்லி, ஜன. 8&

அனைத்து ஆதார் அட்டைகளில் உள்ள தகவல்களும் பாதுகாப்பற்றவை என்று செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது ஆதார் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆதார் அட்டையின் பாதுகாப்புத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆதார் எண்ணுக்குகாக பெறப்படும் விவரங்கள் தனிமனிதரின் அந்தரங்கத்தைப் பேணும் உரிமையை மீறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இந்நிலையில், வெறும் 500 ரூபாயில் பத்தே நிமிடங்களில் நாடு முழுவதும் உள்ள அனைவரின் ஆதார் விவரங்களும் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி ட்ரிபியூன் இந்தியாஎன்ற ஆங்கில பத்திரிகை இது குறித்து ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளது.அதிர்ச்சியளிக்கும் இத்தகவலை ஆதார் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், ஆதார் தகவல்கள் பாதுகாப்பாகவே உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here