Home தலையங்கம் வணிகமயமாகிறதா ஜல்லிக்கட்டு…!

வணிகமயமாகிறதா ஜல்லிக்கட்டு…!

33
0
SHARE

பொங்கல் என்றதும் தமிழர்களின் மனதில் தொடர்ந்து முதலில் நினைவிற்கு வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களிடம் தொன்று தொட்டு இருந்து வரும் கலாச்சாரத்தில் எத்தனையே சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் மாற்றப்பட்டு விட்டாலும், அனைத்து மக்களும் ஒன்றுதிரண்ட ஒரே விஷயம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குத்தான். ஏறுதலுவுதல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் தமிழர்களின் இப்பாரம்பரிய விளையாட்டு இன்று வணிகமயமாக்கப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்தசல்லிக் காசுஎன்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடுவர். மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில்சல்லிக்கட்டுஎன்று மாறியது. பின்னர் பேச்சுவழக்கில் அது திரிந்துஜல்லிக்கட்டுஎன்று இன்றும் அழைக்கப்படுகிறது.

தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிப்பதில் பல வெளிநாட்டு அமைப்புகள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் பீட்டா, புளூ கிராஸ், பீப்பிள் பார் அனிமல்ஸ், இந்திய விலங்குகள் நல வாரியம் முதலிய அனைத்தும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பாளிகள். இவை அனைத்துமே அமெரிக்க ஆதரவு அமைப்புகள். விலங்குகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி பணம் பார்ப்பதுதான் இவர்களது நோக்கம். ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். ஆனால் அவற்றை எதிர்க்காத இந்நிறுவனங்கள் ஜல்லிக்கட்டை மட்டும் எதிர்ப்பதற்கான நோக்கம்தான் என்ன..?

நம் பாரம்பரிய மாட்டினங்களை அழிப்பது மட்டுமல்லாமல் அவர்களது வணிகத்தை பெருக்குவதுதான். இவர்களது நோக்கம் அறிந்துதான் நம் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று திரண்டது. பலநாள் போராட்டத்தின் பலனாக ஜல்லிக்கட்டு மீட்டெடுக்கப்பட்டது. போராடி மீட்டெடுத்த ஜல்லிக்கட்டு இன்று மீண்டும் வணிகமயமாக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. ஏனெனில் ஜல்லிக்கட்டு மரபார்ந்த முறையிலேயே நடத்தப்படுகிறது இதில் வணிகத்திற்கு இடமில்லை என்று கூறியே பீட்டா எதிர்க்கப்பட்டது.

ஆனால் இந்தமுறை பணம் பண்ணும் எண்ணத்திலேயே எதையும் பார்க்கும் கார்ப்பரேட் கையாட்கள் ஜல்லிக்கட்டை எதிர்க்க முடியாத பட்சத்தில் அதனுடன் கைகோர்ப்பதுபோல் பாவனை செய்கின்றனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையும் சென்னை ஜல்லிக்கட்டு அமைப்பும் இணைந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் ஜனவரி 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துகிறது. இந்த ஜல்லிக்கட்டை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருக்கின்றது. அதுதான்பூர்விகா ஜல்லிக்கட்டு சென்னையில்“..இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 500 காளைகளும் நூற்றுக்கணக்கில் மாடுபிடி வீரர்களும் வரவிருக்கின்றனர். நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கக்கூடிய வகையில் பாதுகாப்புடன் கூடிய அரங்கமும் அமைக்கப்பட உள்ளது. இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இதனால் பணம் பண்ணவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் பீட்டாவின் வாதத்திற்கு இது வலு சேர்க்கும் வகையில் அமைந்துவிடும்.

ஜல்லிக்கட்டை அழிக்கும் நோக்கில் போராடி அது முடியாத நிலையில் இன்று இந்த கார்ப்பொரேட் நிறுவனங்கள் எடுத்திருக்கும் அடுத்த ஆயுதம்தான் இந்த அடுத்துக்கெடுக்கும் உத்தி. இதனால் இப்போது பாதிப்பு இல்லாததுபோல் தோன்றினாலும் மீண்டும் ஜல்லிகட்டுக்கு எதிரான வாதங்கள் வலுபெருவதற்கு வழிவகுக்கும். காப்பொரேட் நிறுவனங்களோடு கைகோர்க்காமல் பழைமை வாய்ந்த முறைப்படி வாடிவாசல் திறக்கப்பட்டு வெகுண்டுவரும் காளையை அடக்குவதில் தான் அதன் சிற்ப்பும் அடங்கியிருக்கிறது. தொன்மையான தமிழ் மரபு என்பது வேளாண் வழியில் வந்ததேமரபு வழிப்படி நடத்தப்பட்டால் மட்டுமே அதன் சிறப்பும் காலத்திற்கும் நிலைக்கும்.