Home சம்பவம் பள்ளிக்கரணை அருகே 10 வீடுகளில் கொள்ளை முயற்சிகண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவு

பள்ளிக்கரணை அருகே 10 வீடுகளில் கொள்ளை முயற்சிகண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவு

11
0
SHARE

சோழிங்கநல்லூர், ஜன. 8&

பள்ளிக்கரணை அருகே அடுத்தடுத்த 10 வீடுகளில் கொள்ளை முயற்சிகளை கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பள்ளிக்காரணை அருகே சித்தாலப்பாக்கம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள அடுத்தடுத்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று இரவு 3 பேர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் வீடுகளின் கதவு, பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பூட்டை உடைக்க முடியாததால் அடுத்தடுத்து உள்ள ஒவ்வொரு வீடாக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணிகண்டன் என்பவரது வீட்டின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு எழுந்தார். உடனே ‘‘திருடன்திருடன் என்று கூச்சலிட்டார்.

மேலும் உதவிக்கு அருகில் உள்ளவர்களை தொலை பேசி மூலம் அழைத்துள்ளார். சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்தனர். அப்போது மர்மநபர்கள் குடியிருப்புக்குள் வருவதும், கண்காணிப்பு கேமராக்களை திருப்பி பதிவுகளை மறைப்பதும் பதிவாகி இருந்தது.

கடந்த  சில நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியின் இரவு காவலர் என கூறிக்கொண்டு நோட்டமிட குடியிருப்புக்குள் வந்த வடமாநில நபரும் இரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here