Home சம்பவம் திருவேற்காட்டில் அக்காள், தங்கை கழுத்து அறுத்து கொலைசொத்துக்காக நடந்த கொடூரம்

திருவேற்காட்டில் அக்காள், தங்கை கழுத்து அறுத்து கொலைசொத்துக்காக நடந்த கொடூரம்

10
0
SHARE

பூந்தமல்லி, ஜன. 8&

திருவேற்காட்டில் சொத்து தகராறில் அக்காள், தங்கை கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வளர்ப்பு மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவேற்காடு மாதிரிவேடு மேட்டு தெருவில் வசித்து வந்தவர் ஏழுமலை (51). இவரது தாய் ரங்கநாயகி (85). நேற்று முன்தினம் ஓசூரில் தனது உறவுனருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது மனைவியுடன் சென்று விட்டார். வீட்டில் ரங்கநாயகி மட்டும் இருந்தார். இரவில் தனியாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அதே பகுதியில் வசித்து வந்த அவரது தங்கை கிருஷ்ணவேணி (75), துணைக்காக உடன் சென்று அந்த வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று காலை கிருஷ்வேனியின் வளர்ப்பு மகன் சரவணன் இருவருக்கும் காலை உணவு கொடுக்க சென்றபோது கிருஷ்ணவேணி, ரங்கநாயகி ஆகிய இரண்டு பேரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. வீட்டிற்குள் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இரண்டு சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்கானிப்பு கேமரா இணைப்பை துண்டித்து உள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சகோதரிகள் இரண்டு பேருக்கும் வேண்டிய சொத்தும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரங்கநாயகியின் வளர்ப்பு மகனான பாலகிருஷ்ணன் தனக்கும் சொத்தில் சரி பங்கு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தனக்கு சொத்து கொடுக்காத காரணத்தால் வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலகிருஷ்ணன், இரவு வீட்டின் பின் பக்கமாக சென்று கதவை தட்டி உள்ளார். சகோதரிகள் இருவரும் கதவை திறந்து உள்ளனர். உள்ளே சென்றபோது இருவரின் கழுத்தையும் அறுத்து கொலை செய்து விட்டார்.

தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவர்கள் அணிந்து இருந்த நகையை எடுத்து சென்று விட்டார். காலையில் கொலை சம்பவம் நடந்தது தெரிந்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் வளர்ப்பு மகன் பாலகிருஷ்ணன் மட்டும் அங்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், பாலகிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது திருவேற்காடு மதுபானக்கடை அருகே நின்று கொண்டு இருந்த பாலகிருஷ்ணனை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது ரத்தம் படிந்த சட்டை, கையில் நகைகள் வைத்து இருந்தான். இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கொலையில் வேறு யாராவது அவருக்கு உதவினார்களா? என்ற கோணத்திலும் திருவேற்காடு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக வளர்ப்பு மகனே இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here