Home மற்றவை அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கைபோலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கைபோலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

12
0
SHARE

சென்னை, ஜன. 8&

அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தினால், கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநகர அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன்,  அரசு பேருந்துகள் பல்வேறு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. போராட்டத்தை மீறி இயக்கப்படும், அரசு பேருந்துகள் மீது சில இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல், அண்ணாநகர், கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட இடங்களில் அரசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக மதுரவாயல் சுரேஷ் (25), திருப்பத்தூர் மகாலிங்கம் (30),  கோகுலகிருஷ்ணன் (51), அண்ணாநகர் மேற்கு பணிமனையில் பணி செய்து வரும் முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (46), வியாசர்பாடி பாஸ்கர் (47), மணிகண்டன் (21), சதீஷ் குமார் (19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் நீடித்து வருவதால் இயக்கப்படும் பேருந்துகளில் பயணம் செய்ய பயணிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்துஇயக்கப்படும்அரசுபேருந்துகளுக்குமுழுபாதுகாப்புஅளிக்கசென்னைபோலீஸ்கமிஷனர்ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here