Home மற்றவை நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு வராவிட்டால் ‘போராட்டம்நடத்தி சிறை செல்ல தயார்’தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்

நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு வராவிட்டால் ‘போராட்டம்நடத்தி சிறை செல்ல தயார்’தொழிற்சங்கங்கள் திட்டவட்டம்

13
0
SHARE

சென்னை, ஜன. 8&

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நீதிமன்றத்தில் நியாயமான தீர்ப்பு வராவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தி சிறைக்கு செல்லவும் தயாராக இருப்பதாக  அனைத்து தொழிற்சங்கங்களும் உறுதியாக உள்ளன.

இது குறித்து தொழிற்சங்கத்தினர் சார்பில் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியினை சேர்ந்தவர்கள் வண்டிகளை உடைத்துவிட்டு எங்கள் சங்கத்தினர் மீது பழி போடுகிறார்கள்.

அதற்கான சான்று உங்கள் ஊடங்களிலே வந்தது. மாநிலம் முழுவதும் அப்படிப்பட்ட சதியில் அவர்கள் இறங்கியுள்ளார்கள். எங்கள் தோழர்களை கைது செய்யக்கூடிய முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அவ்வாறாக பொய்வழக்கு போடும் போது காவல் நிலையத்தில் அது குறித்து விளக்கத்தைக்கொடுத்து வழக்குகளை போடாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையும் எந்த பொய் புகார் போட்டும் ஆளும் கட்சியினரின் பேச்சைக்கேட்டு கைது செய்யக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

புதிதாக ஓட்டுனர்களை போட்டு பேருந்துகளை இயக்கியதால் 4 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு விபத்தில் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. வயல்களில் வண்டி ஓட்டுவது, மலைகளில் வண்டி ஓட்டுவது என பல்வேறு விபத்து குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. ஏற்கனவே எங்களுடைய பேருந்துகள் பழுதானவை என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

தினமும் பராமரித்தால் தான் அந்த பேருந்துகளை இயக்கமுடியும். பயிற்சி பெற்ற தினமும் அந்த பேருந்துகளை இயக்கபவர்களால்தான் அந்த பேருந்துகளை இயக்கமுடியும். தொழில் நுட்பப்பணியாளர்கள் 100 சதவீதம்

பணிமலையில் இல்லை. வண்டியை பராமரிக்க யாரும் இல்லை. அமைச்சரே வண்டிஓட்ட வாருங்கள் என்கிறார். அவர்களிடம் பேஜ் இருக்கிறதா.

எம்.எல்.. வண்டியை ஓட்டினாரே அவரிடம் பேஜ் இருந்ததா? சட்டத்தை மீறி பல்வேறு செயல்களை இந்த அரசு செய்து வருகிறது. 2.57 என்ற விகிதத்தில் ஊதிய உயர்வை வழங்க வேண்டும். நிலுவைச்சம்பளத்தை (அரியர்ஸ்) உடனடியாக வழங்கவேண்டும். எங்களிடம் எடுத்த ரூ.7000 கோடியை எங்கள் வங்கிக்கணக்கில் போடுவதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும். முதல்வர் நிலவரத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

அவர்கள் கொடுத்த தொகை உடன்பாடு இல்லாத காரணத்தினால் தான் இந்த வேலைநிறுத்தமே நடக்கிறது. நீதிமன்றத்தின் மதிப்பு மரியாதை எங்களுக்கு உள்ளது.

ஆனால், அவர்கள் எங்கள் பக்கம் இருக்கிற கருத்தையும் கேட்கவேண்டும். இன்று (8ந் தேதி) எங்கள் வழக்கறிஞர் மூலமாக இது குறித்து நீதிமன்றத்தில் பேசஉள்ளோம். ஓடாத பேருந்துகளை ஓட்டியதாக காட்டி அதற்கு சம்பளமும் கொடுத்து இவர்கள் பணம் சம்பாதிக்கப்போகிறார்களா என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.

இவர்கள் பேருந்துகள் ஓடிக்கொண்டிருப்பதாக இவர்கள் பொய்கணக்கு காண்பிக்கிறார்கள். எங்களுடைய முக்கியமான 12 அகில இந்திய அமைப்புகள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இன்றைய (8.1.18) ஆர்ப்பாட்டம் என்னும் முடிவு. ஆர்ப்பாட்டத்தை பார்த்துவிட்டு எங்களுடன் இணைந்த அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுதுவது என்றால் தீவிரப்படுத்துவார்கள்.

நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பு முறையாக இருந்தால் அதை ஏற்போம். இல்லை என்றால் அதை ஏற்கமாட்டோம். காந்தி, பெரியார் உள்பட பலர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவில்லை கைது செய்யப்படனர். எங்களுக்கும் இந்த நாட்டில் அதே தான் நிலைமை என்றால் அதையும் நாங்கள் சந்திக்க தாயராக உள்ளோம். சட்டசபையில் ஆளும்கட்சி எம்.எல்..க்கள் உட்பட எங்களின் கோரிக்கையை ஏற்று நியாயம் வாங்கி தருவார்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here