Home அரசியல் தற்போதைய அரசியல் நகைச்சுவையாகி விட்டது பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் பேட்டி

தற்போதைய அரசியல் நகைச்சுவையாகி விட்டது பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் பேட்டி

23
0
SHARE

தாம்பரம், ஆக. 28&  தற்போதைய அரசியல் சூழ்நிலை நகைச்சுவையாகி விட்டது என்று பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன் கூறினார்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் பேரூராட்சி அலுவலகம் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் பொற்றாமரை சங்கரன் தலைமை தாங்கினர்.

இதில் பா.ஜ.க. ராஜசபை எம்.பி இல.கணேசன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகருடைய வழிபடுவதற்கான இடமும் இரு உருவச்சிலை எண்ணிக்கைகளும் அதிகமாக ஆகிகொண்டே இருகின்றனர். இளைஞர்கள் தான் அதிகம் ஈடுபட்டு செய்கின்றார்கள் என்பதால் எதிர்காலம் குறித்து எனக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுகின்றது. அந்தவகையில் ஏற்பாடுகளை செய்த அனைவர்க்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

தற்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எடப்பாடியை தினகரன் நீக்கி இருக்கும் சம்பவங்கள் நகைச்சுவையாக போய்விட்டது. சிறுபிள்ளைகள் விளையாட்டைப்போல உன்னை நான் நீக்குகிறேன், வெறுக்கிறேன் என்பது போல இருகின்றது. எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்துஎடுக்கப்பட்டவர்கள், மக்கள் அ.தி.மு.க.வை ஐந்து ஆண்டுகாலம் ஆட்சியமைக்க வாக்களித்து இருக்கின்றார்கள்.  ஒரு ஆண்டு காலம் நிறைவுற்றநிலையில் துர்ரதிஷ்ட வசமாக ஜெயலலிதா  இழந்து இருகின்றது தமிழகம். அனால் எஞ்சிய நான்கு ஆண்டு காலம் ஒற்றுமையாக இருந்து இந்த ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுவதுதான் அதிமுக செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். பன்னீர்செல்வம் குழுவினர் மீண்டும் எடப்பாடி அணியினருடன் வந்து சேர்ந்து இருப்பது என்பது மக்களால் வரவேற்கப்படுகிறது.

அனால் இப்பொழுது தினகரன் அணி என்பதாக கருத்தப்படக்கூடிய சிலரால் வந்துஇருக்கக்கூடிய சில பிரச்சனைகளையும் அவர்கள் திறன்பட சமாளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து இருக்கின்றார்கள். அவர் என்ன சொல்கின்றார் என்பதை பார்க்கவேண்டும் அதிஷ்டவசமாக நமக்கு திறமையான ஒரு ஆளுநர் கிடைத்து இருக்கின்றார் என்பதால் நான் ஆளுநர் மீது நல்லநம்பிக்கையை வைத்து இருக்கின்றேன் நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.