Home விளையாட்டு காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வரும் சனத் ஜெயசூர்யா

காயத்தால் நடக்க முடியாமல் தவித்து வரும் சனத் ஜெயசூர்யா

18
0
SHARE

கொழும்பு, ஜன. 7&

இலங்கை அணியின் முன்னாள்அதிரடி தொடக்க வீரராக அறியப்பட்ட ஜெயசூர்யா, தான் விளையாடிய காலத்தில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். இலங்கை அணி கடந்த 1996ல் உலகக் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றிய ஜெயசூர்யா, அந்த அணிக்காக 110 டெஸ்ட், 445 ஒருநாள் போட்டிகள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்கள், 31 அரைசதங்களுடன் 6,973 ரன்களை ஜெயசூர்யா குவித்துள்ளார்.ஓய்வுக்குப் பின்னர் இலங்கைக் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை அவர் வகித்து வந்தார். இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுத் தலைவராகவும் ஜெயசூர்யா பதவி வகித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற காலத்திலேயே அடிக்கடி காயங்களால் அவதியுற்று வந்த ஜெயசூர்யாவுக்கு தற்போது கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊன்றுகோல் உதவியால் ஜெயசூர்யா நடந்து வருகிறார். காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு செல்ல இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here