Home தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவி பறிப்பு தினகரன் அதிரடி

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவி பறிப்பு தினகரன் அதிரடி

33
0
SHARE

சென்னை, ஆக. 28& முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்சி பதவியை தினகரன் பறிந்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக இரு அணிகளாக செயல்பட்டுவந்தது. சமீபத்தில் ஒ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இணைந்த பின்னர் ஒ.பன்னீர்செல்வத்திற்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனை டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கொதிப்படைந்து முதல்வர் எடப்பாடியை மாற்றவேண்டும் என்று ஆளுனரிடம் மனு அளித்தனர். தற்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமியின் ஆதரவாளர்களை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் நீக்கி வருகிறார். எங்கள் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர் எங்களை நீங்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துவரும் நிலையில் நேற்று அதிரடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சி பதவியை பறித்து

டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்ட செயலாளா பொறுப்பில் இருக்கும் ஜி.வெங்கடாஜலம் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக எஸ்சி.வெங்கடாசலம் நியமிக்கப்படுகிறார்

. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதிரடியாக டி.டி.வி. அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here