Home சுடச்சுட ஜியோவின் புதிய சலுகைகளால் திட்டங்களைத் திருத்திய ஏர்டெல், ஐடியா

ஜியோவின் புதிய சலுகைகளால் திட்டங்களைத் திருத்திய ஏர்டெல், ஐடியா

20
0
SHARE

மும்பை, ஜன. 7&

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு இயக்குநர்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் தங்களின் பிரபலமான கட்டணத் திட்டங்கள் சிலவற்றை திருத்தியுளதாக அறிவித்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டதின் விளைவாகவும் அதனுடன் போட்டியிடும் முனைப்பிலும் இந்த நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதென்பது வெளிப்படை. ஐடியா செல்லுலார் ஆனது அதன் ரூ.449/ மற்றும் ரூ.509/ கட்டணத் திட்டங்களை நிறுத்தியுள்ளது. அதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.448/ மற்றும் ரூ.509/ திட்டங்களை நிறுத்தியுள்ளது. ஏர்டெல் மற்றும் ஐடியாவின் இந்த திட்டங்கள் அனைத்துமே நாடு முழுவதும் செல்லுபடியாகும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும்.  இதன் பொருள் எந்தவொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும் இந்த திட்டங்களைப் பெற முடியும். தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் பிரபலமான ரூ.448/ கட்டணத் திட்டமானது முன்னர் 70 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருந்தது, தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1 ஜி.பி அளவிலான தரவை வழங்குகிறது.  அதேபோல், அதன் ரூ.509/ கட்டணத் திட்டமானது இப்போது நாள் ஒன்றிற்கு 1 ஜி.பி அளவிலான தரவை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதே திட்டம் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.