Home இந்தியா ஒவ்வொரு நாடும் தங்கள் நிலப்பரப்பை தீவிரவாதிகள் செயல்பாடுகளுக்கு பயன்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்சுஷ்மா ஸ்வராஜ்...

ஒவ்வொரு நாடும் தங்கள் நிலப்பரப்பை தீவிரவாதிகள் செயல்பாடுகளுக்கு பயன்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்சுஷ்மா ஸ்வராஜ் அறிவுறுத்தல்

12
0
SHARE

புதுடெல்லி, ஜன. 7&

ஒவ்வொருநாடும்தங்கள்நிலப்பரப்பைதீவிரவாதசெயல்பாடுகளுக்குபயன்படாதிருப்பதைஉறுதிசெய்யவேண்டும்எனவலியுறுத்தியதோடுஆசியான்நாடுகளுக்கிடையேகடல்சார்ஒத்துழைப்பைமேம்படுத்தவேண்டும்எனவெளியுறவுத்துறைஅமைச்சர்சுஷ்மாஸ்வராஜ்கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்) பொதுத் துறைத் தலைவர் டத்தோ பதுகா லிம் ஜோக் ஹோய் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசியதாக நேற்று  வெளிவிவகார அமைச்சக  செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் வெளிவிவகார அமைச்சக  செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது :

இந்தியா மற்றும் இந்தோனேசியா இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே 5வது கூட்டு ஆணையத்தின் சந்திப்பில் அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “நாங்கள் அனைத்து பயங்கரவாதத்திற்கும் அதன் வடிவங்களிலே கண்டனம் செய்துள்ளோம். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையிலும் எங்களின் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்தை தடுப்பதற்கு  அனைத்து நாடுகளையும் அழைத்துள்ளோம் என ஸ்வராஜ் கூறினார்.

இரு தலைவர்களும் வர்த்தக, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து ஆலோசனை செய்தனர். இந்நிலையில், தென்கிழக்கு ஆசியான் சிந்தனையாளர்கள் மாநாட்டை இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், வரும் குடியரசு தின விழாவில் ஆசியான் நாடுகளின் தலைவர்கள் விருந்தினர்களாக பங்கேற்பதால் இந்தியாவுடனான உறவு வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான அவசியம் இருப்பதாக குறிப்பிட்ட சுஷ்மா, ஒவ்வொரு நாடும் தங்கள் நிலப்பரப்பை தீவிரவாத செயல்பாடுகளுக்கு பயன்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்நாடுகளுடன் 25 ஆண்டுகால உறவை கொண்டாடும் வகையிலான சந்திப்பும் டெல்லியில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here