Home சிறப்புச் செய்திகள் மணல் தட்டுப்பாட்டால்..அந்நிய முதலீடு முடங்கியது

மணல் தட்டுப்பாட்டால்..அந்நிய முதலீடு முடங்கியது

30
0
SHARE

அரசு பேரூந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் தடைவிதித்து, இடைக்கால தீர்ப்பு வழங்கியது. ஆனால் வேலை நிறுத்தம் தொடரும் என்று போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துவிட்டது. தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் உள்ள பேருந்தை  இலவசமாக இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர், ஆர்.டி.ஒ அதிகாரிகள் மூலம் மிரட்டியுள்ளார்..

.தி.மு.. எம்.எல்.ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் கொண்டு வரப்படும் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அப்ப..எதோ.டி.டி.வி தினகரன், தி.மு..வுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. தி.மு..வும் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. தி.மு.க தலைமை 8ம் தேதி சட்டமன்றம் தொடங்கி ஆளுநர் உரையாற்றத் தொடங்கியதும், வெளிநடப்பு செய்ய ஆலோசனை செய்து வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க, எமிஸ் திட்டம், 2011ல் அறிவிக்கப் பட்டது. இதுதொடர்பாக, ‘எமிஸ்இணையதளம் துவங்கப்பட்டு, விபரங்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டது.

மாணவர்களின் எண்ணிக்கை, பெயர், வகுப்பு, ரத்த பிரிவு, முகவரி, ‘ஆதார்எண், மொபைல் போன் எண் போன்ற விபரங்களை பதிவேற்றம் செய்ய, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

பள்ளிகளும், ஆறு ஆண்டுகளாக சில ஆசிரியர்களை நியமித்து, இந்த பணிகளை மேற்கொள்கின்றன. ஆனால், அனைத்து தகவல்களும் அவ்வப்போது மாயமாவதும், அதை மீண்டும் பதிவேற்றம் செய்ய சொல்வதும் தொடர் கதையாக உள்ளது. எமிஸ் தகவல்களை, இணையதளத்தில் இருந்து யாரும் திருடப்படுவது உறுதியாகி உள்ளது.

இந்த பிரச்னையால், அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியால் செயல்பட்ட, எமிஸ் இணையதளம், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

சமீபத்தில், ‘ஆண்ட்ராய்டுசெயலியும் கொண்டு வரப்பட்டது. அதிலும் குழப்பம் ஏற்பட்டு, இரண்டாவது செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் முதலில் இருந்து, தகவல்களை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால், பாடங்களை நடத்துவதா, விபரங்களை பதிவேற்றுவதா என, பள்ளிகள் தவிக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை, ஏற்கனவே சேகரித்த விபரங் களை மீண்டும் மீண்டும் கேட்டு, ஆசிரியர்களை தொல்லை செய்வதை விட்டு, நல்ல தொழில்நுட்ப நிறுவனத்திடம், இந்த பணியை ஒப்படைக்கலாம் என கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.

  தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால், கட்டுமான தொழில்கள் முடங்கி போய்விட்டது.2.5 யூனிட் மணல் அதிகபட்சமாக ரூ5000/ விற்றது. தற்போது விலை ரூ45,000/ இதனால் மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க  புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், மலேஷியாவில் இருந்து, 55 ஆயிரம் டன் மணலை இறக்குமதி செய்தது.

  இறக்குமதி மணலை, துறைமுகத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்லவும், விற்கவும், தமிழக அரசு தடை விதித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு மாதங்களில், அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டது. மேலும், இறக்குமதி மணல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

தனியார் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, கட்டுமான பணிக்கான மணலை இறக்குமதி செய்யலாம்; வெளி மாநிலங்களில் இருந்தும், மணல் எடுத்து வரலாம். ஆனால், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் மணலுக்கு, விலை நிர்ணயிப்பதற்கும், விற்பதற்கும், பொதுப்பணித் துறைக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதிமணல்என்றாலும், வெளி மாநில மணலாக இருந்தாலும், தமிழகத்துக்குள் எடுத்துச் செல்ல, பொதுப்பணித் துறை அனுமதி கட்டாயம். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு, இறக்குமதி மணலை எடுத்துச் செல்வது, முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.. இதனால் இனி மணலை இறக்குமதி செய்ய எந்த நிறுவனமும் முன்வராது..

தமிழகத்தில்மணல்தட்டுப்பாட்டால், அந்நிய தொழில் முதலீடுகள் முடங்கி போய்விட்டது..இதைப்பற்றியெல்லாம் ஆலோசனை செய்யாமல் அரசு செயல்படுகிறது என்று தாத்தா இளைஞர்களிடம் புலம்பினார்.

தாத்தாவும், இளைஞர்களும் சேர்ந்து அமைச்சர்களில் ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு கொடுக்க  தயார் செய்யும் பணியில் ஈடுப்பட்டார்கள்.