Home மற்றவை போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்எஸ்.டி.பி.ஐ. வலியியுறுத்தல்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்எஸ்.டி.பி.ஐ. வலியியுறுத்தல்

11
0
SHARE

சென்னை, ஜன.7&

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என  எஸ்.டி.பி.. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.. கட்சியின் மாநில தலைவர்  தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு இழுத்தடிப்பு வேலைகளை மேற்கொண்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததுள்ளது. இதனால் போக்குவரத்து சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பென்ஷன் பணத்தை நிறுத்தி வைப்பதும், இரண்டு வருடங்களாக ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பதும் நியாயமான நடவடிக்கையாக இருக்க முடியாது.

போக்குவரத்துகழகங்களில்நிர்வாகக்கோளாறால்ஏற்படும்நஷ்டத்தைஅரசேஏற்று, போதுமான நிதி ஒதுக்கி, போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர, சட்ட நடவடிக்கைகள் மூலமாக தொழிலாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.   

தற்போதுபொங்கல்பண்டிகைநெருங்கிவருவதால், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் பன்மடங்கு கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகின்றது.

ஆகவே, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் நிலுவை தொகைவை வழங்குதல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை விரைவில் தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதோடு தொழிற்சங்கங்களும் மக்கள் படும் அவதிகளை கண்டு அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here