Home மற்றவை பெசன்ட் நகர் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா போக்குவரத்து மாற்றம்

பெசன்ட் நகர் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா போக்குவரத்து மாற்றம்

18
0
SHARE

சென்னை, ஆக. 28& சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூற்றியதாவது;

சென்னை, பெசன்ட்நகர், அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு வருகிற 29ம் தேதி முதல் 3 மற்றும் 7ம் தேதி  ஆகிய தினங்களில், அதிக அளவில் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால்,  மூன்று நாட்களும்   போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேளாங்கன்னி மாதா ஊர்வலம் செல்லும் பாதையான 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, 2வது மற்றும் 5வது அவென்யூ ஆகிய தெருக்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. மாலை 4 மணி முதல் எம்.ஜி.சாலை 7வது அவென்யூ சந்திப்பிலிருந்து, 6வது அவென்யூ, 4வது மெயின் ரோடு, சந்திப்பிலிருந்தும், 4வது மெயின் ரோடு, 3வது அவென்யூ சந்திப்பிலிருந்தும், மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது, சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி சாலையிலிருந்தும், தாமோதரபுரத்திலிருந்தும் பெசன்ட்நகர் பஸ் டெர்மினஸ் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

வாகனங்கள்நிறுத்துமிடங்கள்;

32வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெசன்ட்நகர் 4வது அவென்யூ  கஸ்டம்ஸ் 2வது குறுக்கு தெரு  5வது அவென்யூ  ஊருர் குப்பம் சாலை  32வது குறுக்கு தெரு  பெசன்ட்நகர் 24வது, 25வது, 26வது, 27வது, 28வது, 17வது மற்றும் பெசன்ட்நகர் 21வது குறுக்கு தெரு  எலியட்ஸ் கடற்கரை 6வது அவென்யூ ,கோஸி கார்னர் முதல் 5வது அவென்யூ சந்திப்பு வரை மாலை 04.00 மணி முதல் மாநகர பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சாலைக்கு இடதுபுறம் திரும்ப அனுமதியில்லை. பெசன்ட் அவென்யூ செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும், எல்.பி.சாலை, எம்.ஜி சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர் பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.

இரவு 8 மணிக்கு மேல் எல்.பி. சாலை ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்திலிருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம். திருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி. சாலையில் வரும் வாகனங்கள் எல்.பி. சாலை, இந்திராநகர் 3வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு, இந்திராநகர் 1 வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர்3வது குறுக்கு தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.

சர்தார் வல்லாபய் பட்டேல் சாலையிலிருந்து கஸ்தூரிபாய் சாலை 3வது குறுக்கு தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.