Home மற்றவை வாக்காளர்கள் குறித்து அவதூறு நடிகர் கமலை கண்டித்து ஆர்.கே.நகரில் மறியல்

வாக்காளர்கள் குறித்து அவதூறு நடிகர் கமலை கண்டித்து ஆர்.கே.நகரில் மறியல்

12
0
SHARE

சென்னை, ஜன. 7&

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஓட்டுக்கு பணம் வாங்கி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டதாக  கருத்து தெரிவித்த, நடிகர் கமலை கண்டித்து, 2 இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், தேர்தலின் போது, ஓட்டுக்கு பணம் வாங்கியதாக, நடிகர் கமல் குற்றம் சாட்டியுள்ளார். வார இதழ் ஒன்றில், என்னுள் மையம் கொண்ட புயல் எனும் தலைப்பில், கமல் அத்தியாயம் எழுதி வருகிறார்.

அதில், ஓட்டுக்கு பணம் வாங்குவது, பிச்சை எடுப்பது போன்றதாகும் என கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து , ஆர்.கே.நகர் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னை, தண்டையார்பேட்டை, மண்டல அலுவலகம் முன்பு, அப்பர் சாமி தெரு, எம்ஜிஎம் கார்டன், கோதண்டராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கமலுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பபட்டன.

இதை போன்று, புது வண்ணாரப்பேட்டை, அருணாச்சலீஸ்வரர் கோயில் தெரு மக்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து, கமலுக்கு எதிராக, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here