Home அரசியல் ரஜினி மன்றம் சார்பில் தொலைக்காட்சிவிவாதத்துக்கு யாரும்நியமிக்கப்படவில்லைரசிகர்களுக்குஅறிவிப்பு

ரஜினி மன்றம் சார்பில் தொலைக்காட்சிவிவாதத்துக்கு யாரும்நியமிக்கப்படவில்லைரசிகர்களுக்குஅறிவிப்பு

14
0
SHARE

சென்னை, ஜன. 7&

ரஜினி மன்றம் சார்பில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிக்கென்று இதுவரை யாரையும் நியமிக்கப்படவில்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி பெயரில் ரசிகர்கள் என்ற பெயரில் சில கலந்து கொண்டு தங்களின் சொந்த கருத்துகளை கூறி வருகிறார்கள்.

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பிலும், ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பிலும் விவாதங்களில் கலந்து கொள்ள நாங்கள் யாரையும் நியமிக்க வில்லை.

விவாதங்களில் தற்போது கலந்து கொள்பவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே ரஜினிகாந்த அவர்கள் தெரிவித்தது போல அன்றாட அரசியல் பற்றி பேசாமல் மன்றத்தை கட்டமைக்கும் விஷயத்தில் கவனத்தையும் நேரத்தையும் செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால் இப்படிப்பட்ட விவாதங்களில் கலந்து கொள்ள யாரையும் நியமனம் செய்ய வில்லை.

ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதங்களில் கலந்து கொள்வது முறையல்ல என்பதால் செய்தி நிறுவனங்கள் ரஜினி ரசிகர்கள், என்று சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஜினி மன்றம் பெயர் மாற்றம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று கூறிய பிறகு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் ரசிகர்களையும் மக்களையும் ஒன்று திரட்டும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்காக இணையதளப்பக்கத்தை தொடங்கி பொது மக்கள் தங்களை பதிவு செய்து கொள்ளளாம் என்று கூறினார்.

அவர் சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் பல லட்சங்களை தான்டிவிட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் ரஜினி தரப்பில் மகிழ்ச்சியாக இருந்தார். இதுவரைக்கும் ரஜினி ரசிகர் மன்றம் என்று இருந்த நிலையில் இப்போது ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கமல் தனது ரசிகர்கள் மன்றத்தையெல்லாம் கமல் நற்பணி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.அதை போல இப்போது ரஜினி மன்றத்தின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here