Home அரசியல் சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவர்களை நீக்காமல் தினகரன் அணியைச்...

சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தவர்களை நீக்காமல் தினகரன் அணியைச் சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்வதா? சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் கேள்வி

30
0
SHARE

திருவாரூர், ஆக. 28&  சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க எடபாடிக்கு எதிராக வாக்களித்த எம்.எல்..களை நீக்காமல் தினகரன் அணியைச் சேர்ந்தவர்களை தகுதி நீக்கம் செய்வதா என சிபிஐ மாநிலச் செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மன்னார்குடி வந்த போது, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வரும் செப்டம்பர் மாதம் 1ந் தேதி முதல் 10ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறோம்.

இதற்காக திருவாரூர் மாவட்டத்தில் 200 குழுக்களை அமைத்துள்ளோம். முக்கியமாக மத்திய அரசு தமிழகத்தின் நலனை தொடர்ந்து புறக்கணிது வருகின்றது. பா..க அரசு தமிழகத்தில் ஆட்சியை உருவாக்கும் எண்ணத்தில் செயல் படுகின்றனர். ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களை பா..க விளைவிக்கிறது.

இந்தியாவை காவி மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். மதவாதக் கொள்கை, இந்துதுவாத கொள்கையை திணிக்க முயற்சிக்கிறார்கள். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை போகும் அரசாக தமிழக அரசு உள்ளது.

காவிரிபிரச்சனை, ஜி.எஸ்.டி, உணவுப்பாதுகாப்பு, காவிரி பிரச்சனையில் கடுமையாக ஜெயலலிதா எதிர்த்தார். அதற்காக இந்த அரசு ஜெயலலிதா அரசு எனச் சொல்லிக் கொண்டு மத்திய அரசின் வஞ்சகச் செயலில் விழுந்து விட்டனர்.

இதுமத்தியஅரசின்பினாமிஅரசுதான். ஜெயலலிதா இறந்த அன்றைய இரவே முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்தால், .பி.எஸ் முதல்வராக இருந்த போதே, நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டியதுதானே. ஆனால் மௌனமாக பதவியில் இருந்து விட்டு, முதல்வர் பதவி இல்லை என்றதும் பிறகு பேசுவது முரண்பாடானது.

சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து காலில் விழுந்து வணங்கியவர்தான் ஓ.பி.எஸ். முதல்வர் பதவி இல்லை என்றதும் நீதி விசாரணை கேட்கிறார்.

எடப்பாடிமுதல்வராகபதவியேற்றப்பிறகு, சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓ.பி.எஸ். அணியிலிருந்த 11 எம்.எல்..க்கள் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தனர்.

அப்போது கொறடாவை மீறி செயல்பட்ட 11 எம்.எல்..,க்கள் பதவி நீக்கம் செய்யவில்லை. .பி.எஸ், .பி.எஸ்., இருவரும் இணைந்ததும், டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்.எல்..க்களை தகுதி நீக்கம் செய்கிறார்கள். தங்களது ஆதரவு இல்லை என்ற கடிதத்தை பெற்றுகொண்டு இன்னும் கவர்னர் நடவடிக்கை எடுக்காதது பெரிய தவறாகும்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு விசாரணை தேவையில்லை என சட்ட மன்றத்தில் சொன்ன முதல்வர் பழனிச்சாமி, இப்போது தேவை எனச் சொல்கிறார். தமிழகத்தில் எத்தனை குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

அதற்கு மொத்தம் எத்தனை கோடி செலவானது என்ற தகவலையெல்லாம் தமிழக அரசு அறிக்கையாக தெரியப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி தானகவே கலைக்கப்பட வேண்டும் என்றார்.

பேட்டியின் போது, மாநில துணைச் செயலாளர் சிவபுண்ணியம், மாவட்டச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி வீரமணி, நகரச் செயலாளர் கலைச்செல்வன், மாணவர் இளைஞர் பெருமன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் துரைஅருள்ராஜன் ஆகியோர் இருந்தனர்.