Home சம்பவம் புழலில் கொள்ளையடித்த 2 பேர் பிடிபட்டனர்

புழலில் கொள்ளையடித்த 2 பேர் பிடிபட்டனர்

9
0
SHARE

செங்குன்றம், ஜன. 6&

புழல் பகுதியில் வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல் உதவி கமிஷனர் பிரபாகரன் மேற்பார்வையில் சப்&இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் தலைமையிலான போலீசார் புழல் கேம்ப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழலில் இருந்து அம்பத்தூர் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக சென்றனர். அவர்களை சப்&இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் விரட்டி சென்று மடக்கி படித்தார்.  இவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தேவராஜ் என்ற கத்திகுத்து தேவராஜ் (28) மற்றும் சென்னை வியாசார்பாடி சர்மா நகரை சேர்ந்த மணி என்கின்ற மணிகண்டன் (27) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் இருவரும் புழல் காவாங்கரை பகுதியில் கடந்த மாதம் ராஜேஷ்குமார் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்கநகை, ஒரு எல்..டி. டிவி கொள்ளையடித்ததும், அதே பகுதியில் 2 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 5 பவுன் தங்கநகை, ஒரு மோட்டார் சைக்கள், ஒரு எல்..டி டிவி மற்றும் 27 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் ஏற்கனவே குன்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here