Home விளையாட்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேற்கிந்திய தீவு 427 குவிப்பு பிராத்வொயிட், ஹோப் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மேற்கிந்திய தீவு 427 குவிப்பு பிராத்வொயிட், ஹோப் சதம்

10
0
SHARE

லீட்ஸ், ஆக.28 இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் மேற்கிந்திய தீவுகள் குவித்தது.

ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 2&வது டெஸ்ட் போட்டி 25&ந் தேதி பகலிரவு ஆட்டமாக துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 70.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 258 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஸ்டோக் 100 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஜோ ரூட் 59 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் முறையே ஒற்றை இலக்க மற்றும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தொடர்ந்தது. பிராத்வொயிட் மற்றும் பவுல் துவக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.

ஆட்டத்தின் 7வது ஓவரிலே, ஆன்டர்சன் பந்து வீச்சில் குக்கிடம் கேட்ச் ஆகி பவுல் அவுட் ஆனார். அப்போது அவர் 5 ரன்கள் எடுத்திருந்தார். அதையடுத்து வந்த பிஷோ மற்றும் ஹோப் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆக, ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவு அணி திணறியது.

இந்த நிலையில் பிராத்வொயிட்டுடன், மற்றொரு ஹோப் கைகோர்த்தார். நிதானமாக ஆடிய இந்த அணி, இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடியது. அபாரமாக ஆடிய பிராத்வொயிட் சதம் அடித்தார். தொடர்ந்து ஹோப்புடம் சதத்தை பூர்த்தி செய்தார்.

அணியின் ஸ்கோர் 281 ஆக இருந்த போது, பிராத்வொயிட் அவுட் ஆனார். அப்போது அவர் 134 ரன் எடுத்திருந்தார். அவரை தொடர்ந்து சிறுதி நேரத்தில், 147 ரன் எடுத்திருந்த ஹோப்பும் பெவிலியன் திரும்பினார். பிளாக்வுட் மற்றும் கேப்டன் ஹோல்டர் ஆகியோர் முறையே 49 மற்றும் 43 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 427 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 169 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆன்டர்சன் அதிகப்பட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.