Home சம்பவம் பொன்னேரியை அடுத்த பள்ளக்குப்பத்தில் கணவரை கொலை செய்த மனைவி: கள்ளகாதலனுக்கு ஆயுள் தண்டனை ...

பொன்னேரியை அடுத்த பள்ளக்குப்பத்தில் கணவரை கொலை செய்த மனைவி: கள்ளகாதலனுக்கு ஆயுள் தண்டனை பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு

15
0
SHARE

பொன்னேரி, ஜன. 5&

பொன்னேரி அடுத்த பள்ளக்குப்பம் பாலவாயல கிராமத்தில் கணவரை கொலை செய்து மூட்டை கட்டி தூக்கி வீசிய மனைவி கள்ளகாதலனுக்கு பொன்னேரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனையுடன் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் மம்மாரா கிராமத்தை சார்ந்தவர் அனிமா தெப்நாத் (25). இவரும் இதே பகுதியை சார்ந்த சுதிப்தேவ்நாத் (27). என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அரிபிதா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் உருளைகிழக்கு விவசாயம் செய்து வந்தனர்.

அப்போது நிர்மல்சர்கார் (28). நண்பர் கதிப்தேவ்நாத் வீட்டிற்கு வந்து செல்லும் போது அனிமாதெப்நாத்க்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதல் ஏற்பட்டது. கள்ளகாதலால் கணவரை விட்டு பிடிந்து நிர்மல்சர்காருடன் சில்சர் என்ற பகுதியில் குடியேறி பின்னர் கடந்த 5ஆண்டுகளக்கு முன்பு செங்குன்றம் பள்ளிக்குப்பம் பாலவாயல் பகுதியில் வாடகை வீட்டில் குடிபுகுந்தனர்.

பல இடங்களில் வேலை செய்த நிலையில் அனிமாதெப்நாத் இருக்கும் இடத்தை அறிந்த கணவர் வீட்டிற்கு வந்து மனைவி அனிமாதெப்நாத்தை தன்னுடன் வருமாறு அழைத்தார்.

தொடர்ந்து வற்புறுத்திய நிலையில் பெண் குழந்தையை அரிபிதாவை நீங்கள் வைத்துக்கொண்டு விவாகரத்து செய்து கொடுக்க கேட்டார். அதற்கும் மறுப்பு தெரிவித்த நிலையில் கடந்த 2015&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20&ந்தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் மாலையில் கணவர் சுதிப்தேவ்நாத்தும் கள்ளகாதலன் நிர்மல்சாகரும் மது அருந்திய நிலையில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தார் கள்ளகாதலனுடன் மனைவி சேர்ந்து திட்டம் தீட்டி போதை தலைகேறிய நிலையில் கணவரை உருட்டு கட்டையால் இருவரும் அடித்து தாக்கினர். பின்னர் கொலை செய்த சுதிப்தேவ்நாத்தை கோணியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு அருகே கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள் இருந்த புதரில் வீசி விட்டு இருவரும் திரிபுரா மாநிலத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில்தீர்த்தங்கரையம்பட்டுகிராமநிர்வாகஅலுவலர்கோவிந்தராஜ்பாலவாயல்கிராமத்தில்தனியார்வீட்டிற்குஎதிரேகட்டிமுடிக்கபடாதகட்டிடத்தில்உள்ளமுட்புதரில்ஒருகோணிமூட்டைகிடப்பதாகவும்அதிலிருந்துதுர்நாற்றம்வீசுவதாகவும்செங்குன்றம்போலிசில்  புகார் செய்ததன் பேரில் போலிசார் வந்து கோணி மூட்டையை பிரித்து பார்த்ததில் அழுகிய நிலையில் புழுகளுடன் ஆண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து இறந்தவரின்  அடையாளம் தெரியாத நபரை பற்றி விசாரித்து வந்தனர். அங்கு கிடைத்த செல்போனின் விவரத்தை அறிந்து திரிபுரா மாநிலத்திற்கு சென்று அனிமாதெப்நாத் கள்ளகாதலன் நிர்மல்சாகரை செங்குன்றம் போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சுப்பிரமணி ஆஜராகி வாதடி சாட்சிகளிடம் விசாரணை முடிந்த பின்னர் நீதிபதி இருசன் பூங்குழலி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனிமாதெப்நாத், நிர்மல்சாகர் ஆகியோர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பின்னர் 2பேரையும் செங்குன்றம் போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here