Home தலையங்கம் மாணவர்கள் தற்கொலைக்கு தீர்வுதான் என்ன…?

மாணவர்கள் தற்கொலைக்கு தீர்வுதான் என்ன…?

15
0
SHARE

மறிஅதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையால்பெற்றோர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும், கல்வித்துறையுமே ஆடிப்போய் உள்ளது.

மாணவர்களின்வாழ்க்கைமுறையில்ஏற்பட்டமாற்றமும், வணிக ரீதியிலான கல்வி முறையுமே அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குகாரணம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.தமிழகத்தில் மட்டுமே கடந்த 2015&ம்ஆண்டு 955 மாணவர்களும், 2016&ம் ஆண்டில் 981 மாணவர்களும், இந்த ஆண்டு இதுவரை 530க்கும் மேற்பட்டமாணவர்களும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக  காவல்துறையின் புள்ளி விவரம் கூறுகிறது.

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில்தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது வேதனையான விஷயமாகும்.தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளில் மூன்றில்ஒரு பகுதி தேர்வு முடிவு வெளியாகும் காலக்கட்டத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இப்போது மாணவர்கள் சாதாரணவிஷயத்துக்குக்கூட தற்கொலைமுடிவை எடுக்கின்றனர். கிராமங்களை விட நகரங்களில் தான் தற்கொலை சம்பவங்கள் அதிகமாகநடக்கின்றன.பள்ளிகளில் ஆசிரியர்கள் கொடுக்கும் நெருக்கடி,வணிக ரீதியிலான கல்விமுறை, பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அதிகரித்துவரும் இடைவெளி, மாறும்வாழ்க்கைமுறை, கலாசார மாற்றம், தோல்வியை தாங்க முடியாத மன நிலை, சிறிய விஷயங்களுக்குக்கூட உணர்ச்சிவசப்படுதல் போன்ற சம்பவங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து உள்ளது.மாணவர்களுக்கு எத்தகைய சூழ்நிலையையும்சமாளித்து வாழ்ந்து காட்டலாம் என்ற மனநிலையை பெற்றோரும், ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும்.

இன்றைய கல்வி மூறை மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கிறது. அதில் இருந்து வெளியில் வர மாணவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்துபடிக்க செய்ய வேண்டும். தங்கள் கனவுகளை பெற்றோர் மாணவர்கள் மீது திணித்து நீ டாக்டர் ஆகவேண்டும், கலெக்டர்ஆகவேண்டும் என்று திணிக்கக்கூடாது.

கல்வி நிறுவனங்கள் வணிகம் சார்ந்த கல்வியைமட்டுமின்றி அறிவு சார்ந்த கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்காகமாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக மாற்றும் நிலையை கைவிட்டு மாணவர்களுக்கு எதில் திறமை உள்ளது என்பதைகண்டறிந்து அதனை பெற்றோரிடம் விளக்கி சொல்லி மாணவர்கள் விரும்பும் கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க வைத்தால்மாணவர்களின் தற்கொலைகளைகுறைக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here