Home சிறப்புச் செய்திகள் ஞாபகமறதி வியாதியை தடுக்கும் வழிகள்

ஞாபகமறதி வியாதியை தடுக்கும் வழிகள்

43
0
SHARE

டிமெனியா எனப்படம் ஞாபக மறதி நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர். தமது வாழ் நாளில் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டிருந்தால் இந்த நோய் ஏற்படாமலே தடுத்திருக்க முடியும் என்று ஒரு சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.

`தி லான்செட்` இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வாழ்நாள் முழுக்க மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைப்பதன் மூலம் மூளை வளு அடையும் என்றும் அது முதுமையில் டிமென்சியா நோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் புதிய ஆய்வின் முடிவு கூறுகிறது.

டிமென்சியாவுக்கானமுக்கியகாரணம்முதுமைஎன்றாலும்அதற்கான 35 சதவீத காதணிகளை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் கூறும் குறிப்பிட்ட ஆய்வு, அதற்கு ஒன்பது விஷயங்களை கவனிக்க வேண்டும் என்கிறது. கல்லாமை, காது கேளாமை, புகைபிடித்தல், மன அழுத்தம், சமூகத்தனிமை, உடல் உழைப்பின்றி இருப்பது அதிக ரத்த அழுத்தம், உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவைதான் அந்த ஒன்பது காரணிகள்.

மூன்றில் இரண்டு பங்கு டிமென்சியா நோயாளிகள் அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் முற்றுவதைத்தடுக்க இது வரை மருந்தில்லை. டிமென்சியா` நோய் குறித்து நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய உயிர்க் கொல்லியாக டிமென்சியா மாறும் என்று அல்சைமர்ஸ் சங்கம் எச்சரிக்கிறது.

இந்தஆபத்தைமனிதர்கள்அனைவருமேஉணர்ந்துஅதற்கேபத்தம்வாழ்வின்அன்றாடநடவடிக்கைகளைநல்லவிதமாகமாற்றிக்கொள்ளவேண்டும்என்றும்அச்சங்கம்வலியுறுத்தியிருக்கிறது.