Home சிறப்புச் செய்திகள் 12 ராசிகளுக்கும் ஒரே கோவில்! சிறந்த பரிகார ஸ்தலம்!!

12 ராசிகளுக்கும் ஒரே கோவில்! சிறந்த பரிகார ஸ்தலம்!!

88
0
SHARE

திருச்சி மாவட்டம், துறையூர் திருச்சி சாலையில் பகளவாடி, கரட்டாம்பட்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்ததில் இறங்கி அந்த கல்லூரி சுற்றுசுவரை ஒட்டி செல்லும் கிழக்கு திசையின் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றால் அங்கு அமைந்துள்ள கிராமத்தின் பெயர் சத்திரம். அவ்வூரில் மிக பழமை வாய்ந்த 12 ராசிகள் ஓரே சக்கர வடிவில் அமையப்பெற்ற பரிகார ஸ்தலமாக சித்தர் சிவபீடம் என அழைக்கப்படுகின்ற அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஷ்வரர் எனும் சிவாலயம் அமைந்துள்ளது.

ராணிமங்கம்மாள்ஆட்சிக்காலத்தில்அவரால்இங்குஅமைக்கப்பட்டஅன்னதானசத்திரக்கட்டிடம்அமைந்துகாணப்பட்டதால்காலப்போக்கில்குறுகிசத்திரம்எனபெயர்விளங்கியது. அன்னதான சத்திரம் அமைக்க இந்த பகுதியை தேர்ந்தெடுத்திருப்பது அதன் சுற்றுசூழலைப் பார்த்தாலே தெரியும். ஏன்னென்றால் இந்த சத்திரம் பகுதியின் வடபுறமும், தென்புறமும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் ஓங்கி நிற்கும் மலைகள் கிழக்கே ஏரியின் நீராதாரமும் உள்ள பகுதியில் அன்னதான சத்திரம் அமைப்பதும் உண்டு களைப்புற்றவர்கள் ஓய்வெடுக்க தேவையான அமைதியும், குளிர்ச்சியும் இயற்கையாக பெற்ற இந்த இடத்தில் அன்னதான சத்திரம் அமைந்திருந்தது சிறப்பம்சமாகும்.

இங்குதான்பழமையானவட்டவடிவிலானசித்தர்சிவபீடம்எனும்சிவாலயம்அமைந்துள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கு உரிய சின்னங்கள், ஜராவதம், புண்ட்றிகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபெளமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்ககூடிய சிற்பங்கள் ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4,8,16,32 ஆகிய எண்ணிக்கைகளை கொண்டு வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வட்ட வடிவத்தில் பீடம் அமையபெற்று அதன்மேல் அனுகிரக மூர்த்தியாக ஸ்ரீ ஏகாம்பரேஷ்வரரும் சாரங்கநாத சித்தர் வழிப்பட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றன.

இதற்கு ராசி கோவில் என்ற பெயரும் உண்டு. இந்தியவிலேயே வேறு எங்கும் இது போன்ற சிறப்பம்சங்களுடன் எந்த சிவ ஆலயமும் அமையப்பெறவில்லை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இந்த கோவில் கடந்த 2011&ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதுதவிர ஸ்ரீகாமாட்சியம்மன், ஸ்ரீசிந்தாமணி மாணிக்க வினாயகர், ஸ்ரீஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக அமையப்பெற்றுள்ளன.

சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஸ்ரீஏகாம்பரேஷ்வரரை வழிப்பட்டதாகவும் அவர் இந்த ஆலயத்தில் ஜுவ சமாதி அடைந்ததாகவும் கருதப்படுவதால் அவர் நினைவாக துளசி மாடமும் அதன் அருகில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சித்தர் சன்னதியாக அமையப்பெற்றுள்ளது. இந்த சித்தர் சன்னதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும் 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுவது குறிப்பிடதக்கது.

இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை சித்தர் வழிபாட்டில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். மேலும் கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையபெற்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும்.

இதுதவிர நவகிரகங்கள், காலபைரவர் ஆகியனவும் உண்டு. சீதா குளம் என்ற தெப்பக்குளம் அக்னிமூளையில் உள்ளது. ராமர் செல் கேட்டு அக்னி பயிற்ச்சி செய்த சீதாதேவி இக்குளத்தில் நீராடி பின்னர் இங்குள்ள சிவ பீடத்தில் உள்ள சிவனை வழிப்பட்டதாக ஐதீகம்.

பீடத்திலுள்ளயானைசிலைஒன்றும், சிவன் சன்னதியின் கோமுகம் பகுதியும் உடைக்கப்பட்டிருப்பதை பார்க்கின்றபோது இந்த கோவில் முகலாய படையெடுப்புக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இக்கோவிலில்பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, ஐப்பாசி பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட அனைத்து விஷேச தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். பீடத்தில் பக்தர்கள் தங்கள் ராசிக்கு உரிய இடத்தில் சுற்று எண்ணிக்கையின் அடிப்படையில் தீபம் எற்றி வழிபடுகின்றனர்.  இந்த கோவிலில் வழிபாடு செய்யபவர்கள் இங்கு நிலவும் அமைதியை விரும்பி மீண்டும் மீண்டும் வருகின்றனர்.