Home சம்பவம் உத்திரமேரூரில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல்பஸ்இயக்காததால்பொதுமக்கள்சாலைமறியல்

உத்திரமேரூரில் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல்பஸ்இயக்காததால்பொதுமக்கள்சாலைமறியல்

10
0
SHARE

காஞ்சிபுரம், ஜன. 4&

கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பஸ் இயக்காததால் உத்திரமேரூரில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உத்திரமேரூரில் அதிகாலையிலிருந்தே விடுமுறை முடிந்து சென்னை, செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்வதற்காக உத்திரமேரூர் பஸ்நிலையத்தில் மக்கள் காத்து இருந்தனர். போளூர், வந்தவாசி பகுதியில் இருந்து வந்த பஸ்களில் அதிக அளவில் கூட்டம் இருந்ததால்மக்கள் பஸ்சில் ஏறி செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

விடுமுறைக்கு பின்பு வரும் வேலைநாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதில்லை. இதற்காக பலமுறை கோரிக்கை விடுத்தும் போக்குவரத்து நிர்வாகம் பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதும், செவிசாய்ப்பதும் இல்லை.

நேற்றும் அதே நிலை நீடித்ததால் கோபம் அடைந்த பொதுமக்கள் உத்திரமேரூர் பஸ்நிலையம் முன்பு உத்திரமேரூர்&சென்னை நெடுஞ்சாலையில் குறுக்காக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போக்குவரத்து மேலாளர் ராஜசேகரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர்கள் பொதுமக்களிடம் சமரசம் பேசி சாலை மறியலை கைவிட வலியுறுத்தினர். பின்னர் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் இதுகுறித்து பணிமனை மேலாளர் ராஜ சேகரிடம் கேட்டபோது இன்று காலை உத்திரமேரூர் பஸ் நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டது.

7.10க்கு வரும் பஸ் சற்று தாமதமாக வந்ததால் கூட்டம் அதிகமாகிவிட்டது. அதற்குள் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவிட்டனர். மேலும் பணிமனையிலுள்ள பஸ்களை வைத்து கூட்ட நெறிசலை சரிசெய்து வருகிறோம். கூடுதலாக பஸ்கள் பணிமனைக்கு கிடைத்தவுடன் பொதுமக்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here