Home சுடச்சுட மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் பயணசலுகைரத்துமாணவர்களுக்குரயில்வேஎச்சரிக்கை

மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால் பயணசலுகைரத்துமாணவர்களுக்குரயில்வேஎச்சரிக்கை

11
0
SHARE

சென்னை, ஜன.4&

மின்சார ரெயிலின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றால், மாணவர்களின் பயண சலுகை ரத்து செயப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) சென்னை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் லூயிஸ் அமுதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னையில் மின்சார ரெயில்களில் படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்க 8 சிறப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சாதாரண உடையில் கண்காணித்து, படிக்கட்டில் பயணம் செய்வோரை செல்போன் மற்றும் கேமராவில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுப்பார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் மாணவர்களாக இருந்தால் கல்லூரி நிர்வாகத்திடம் அந்த வீடியோ பதிவு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்பவராக இருந்தால் அதனை ரத்து செய்ய தெற்கு ரெயில்வேக்கு பரிந்துரை செய்வோம்.

மற்றவர்கள் மீது, சேகரிக்கப்படும் ஆவண அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை ஏற்கனவே திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here