Home சுடச்சுட குண்டர் கும்பலின் தலைவன் சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு இன்று தண்டனை அறிவிப்பு

குண்டர் கும்பலின் தலைவன் சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு இன்று தண்டனை அறிவிப்பு

13
0
SHARE

சண்டிகர், ஆக. 28&  குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஹரியானா அரசுகளை மிரட்டும் வகையில் தேரா சச்சா சவுதா என்கிற ஆன்மீக அமைப்பை நடத்தியவர் ராம் ரஹீம் சிங். மார்டன் சாமியாராக, நடிகராக, பாப் பாடகராக மக்களை வசியப்படுத்தியவர் ராம் ரஹீம் சிங்.இவருக்கு திரண்ட கூட்டங்களைப் பார்த்து பஞ்சாப், ஹரியானா அரசுகள் மண்டியிட்டன. ராம் ரஹீம்சிங் வழக்கில் தீர்ப்பு வரும்; வன்முறை வெடிக்கும் என தெரிந்து விடுமுறை விட்டு போக்குவரத்தை ரத்து செய்த அரசுகள் இந்த கும்பலை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தன.

இதன்விளைவுதான் பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் போர்க்களமானது.பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன; வன்முறை கும்பல் சரமாரி கற்களை வீசியது; ஆயிரக்கணக்கான குண்டர்கள் நடத்திய இந்த அட்டூழிய வன்முறையில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆனால் ஹரியானா அரசு கை கட்டி வேடிக்கை பார்த்தது.இந்த வன்முறையை ஹரியானாவில் ஆளும் பா..க அரசு தடுக்கவில்லை. அதேநேரத்தில் இந்த வன்முறை பஞ்சாப்ஹரியானா உயர்நீதிமன்றம் மிக வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ராம் ரஹீம்சிங்கின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட்ட ஈடு தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமமான தேரா சச்சா சவுதாவின் பெயரிலுள்ள சொத்துக்களை அதிகாரிகள் முடக்கி வருகின்றனர்.

இந்த அமைப்புக்கு ஹைதராபாத் அருகே 55 ஏக்கர் நிலம் உள்ளது.இந்த நிலத்தை சாமியார் ராம் ரஹீம் சிங்கின் பக்தர் ஷ்யாம்லால் என்பவர் பாதுகாத்து வருகிறார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த 55 ஏக்கர் நிலம் 200715ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது.சாமியார் ராம் ரஹீம் சிங், ஹைதராபாத்துக்கு 2002ஆம் ஆண்டிலிருந்து பலமுறை வருகை புரிந்துள்ளதாக ஷ்யாம்லால் கூறினார்.

இறுதியாக சாமியார் 2012ஆம் ஆண்டு ஹைதராபாத் வந்ததாக ஷ்யாம்லால் கூறினார்.அதேபோல் பெங்களூருவில் ருக்மணி நகரில்தன் தன் சத்குருஎன்னும் பெயரில் ஒரு ஆசிரமம் இயங்கி வந்தது. அதனை நான்கு பேர் பராமரித்து வந்தனர். தற்போது அந்த ஆசிரமத்தில் இருப்பவர்களை வெளியேற்றி, ஆசிரமத்தை மூடிவிட்டதாக காவல்துறை உயர் அதிகாரி சேத்தன் ரத்தோர் கூறினார்.

இதையடுத்து ராம் ரஹீம் சிங்கின் ஆசிரமங்கள் சோதனையிடப்பட்டன. அப்போது ஆசிரமத்தில் பிஸ்டல்கள், ரைபிள்கள், ஏகே 47 ரக துப்பாக்கி, பல்லாயிரக்கணக்கான இரும்பு லத்திகள், கோடாலிகள், ஹாக்கி ஸ்டிக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.அத்துடன் வெடிபொருட்கள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவையும் ராம் ரஹீம் ஆசிரமங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன. சிர்சா ஆசிரமத்துக்குள் பதுங்கி இருந்த 4,000 ஆதரவு குண்டர்கள் படிப்படியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங்குக்கு அளிக்கப்படும் தண்டனை தொடர்பான தீர்ப்பு வரும் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போதும் ராம் ரஹீம் சிங் ஆதரவு குண்டர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நீதிபதிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க முடிவு செய்யாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here