Home சம்பவம் எண்ணூர் கடல் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கரை ஒதுங்கிய போலீஸ்காரர் கொலையா?...

எண்ணூர் கடல் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கரை ஒதுங்கிய போலீஸ்காரர் கொலையா? போலீசார் விசாரணை

23
0
SHARE

சென்னை, ஆக.27& சென்னை எண்ணூர் கடல் பகுதியில் வெட்டு காயங்களுடன் பிணமாக கரை ஒதுங்கிய போலீஸ்காரர், கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.

சென்னை எண்ணூர் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 40 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில், வெட்டு காயங்கள் இருந்ததால், அவர், கொலை செய்யப்பட்டாரா? அவர் யார்? எந்த ஊர் என விசாரணை நடத்தி வந்தனர்.

ராயபுரம், தம்புலைன், காவலர் குடியிருப்பு கே பிளாக்கை சேர்ந்த ஸ்ரீராமுலு(42) ராயபுரம் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 2 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்ற ஸ்ரீராமுலு, வீடு வந்து சேரவில்லை. இதனால் அவரை தேடிவந்தனர்.

இதை தொடர்ந்து கடற்கரையில் பிணமாக கிடந்தவர் ஸ்ரீராமுலு என தெரியவந்தது. எண்ணூர் போலீசார் தொடர்ந்து விசாரித்த போது, ஸ்ரீராமுலு கடந்த 2 நாட்களுக்கு முன்னர், நடைபயிற்சி செல்வதாக கூறிவிட்டு காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு கால் தவறி கடலில் விழுந்து இறந்தாரா? அல்லது அவரை அடித்து கொன்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீராமுலுவுக்கு, வரலட்சுமி என்ற மனைவியும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிக்கும் பரத்ராஜ், வினித்ராஜ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.