Home சம்பவம் கல்பாக்கம் அருகே கிழக்குகடற்கரைசாலையில் இருசக்கர வாகன விபத்துஇருவர் பலி

கல்பாக்கம் அருகே கிழக்குகடற்கரைசாலையில் இருசக்கர வாகன விபத்துஇருவர் பலி

16
0
SHARE

கல்பாக்கம், ஜன. 3&

சென்னை கானத்தூரைச் சேர்ந்தவர் ஜாய் எமர்சன் வயது  19 இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.. இரண்டாமாண்டு பயின்று வந்தார்.

இந்நிலையில்நேற்றுமுன்தினம்இரவுதனதுபைக்கில்சொந்தவேலையாககல்பாக்கம்சென்றுவிட்டுமீண்டும்வீடுதிரும்புவதற்காககிழக்குகடற்கரைசாலைவழியாகவந்துக்கொண்டிருந்தபோதுஆரம்பாக்கம்என்றஇடத்தில்சாலையின்குறுக்கேஒருபெரியகட்டுவிரியன்பாம்புசாலையைகடப்பதைப்பார்த்தஜாய்எமர்சன்பாம்புமீதுபைக்கைஏற்றாமல்இருக்கபிரேக்போட்டதில்நிலைதடுமாறிகீழேவிழுந்தார். உடனே பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத பைக் இவர் மீது மோதி விட்டு சென்றதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜாய் எமர்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சதுரங்கப் பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதுபோல் திருவள்ளூர் தனலட்சுமி தெருவை சேர்ந்தவா; ஜானகிராமன். இவரது மகன் சரத்குமார் வயது 23.

இவரும்அதேபகுதியைச்சேர்ந்தஇவரதுநண்பருமானஅனில்என்பவரும்நேற்றுமுன்தினம்இருசக்கரவாகனத்தில்பாண்டிச்சேரிசென்றுவிட்டுமீண்டும்கிழக்குகடற்கரைசாலைவழியாகமாலைஊர்திரும்பிக்கொண்டிருந்தனர். பைக்கை சரத்குமார் ஓட்டிவந்தார். கல்பாக்கம் அடுத்த கொடப்பட்டினம் அருகே வந்துக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது.

இதில்சரத்குமார்சம்பவஇடத்திலேயேஉயிரிழந்தார். அனில் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here